Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல தோனிக்கு பிறகு தளபதிக்கு மெழுகு சிலை.. எங்கு தெரியுமா? கெத்து காட்டும் விஜய்
உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்களைக் கொண்ட தளபதி விஜய் தற்போது தனது 64வது படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக உள்ளார். இவர் நடித்து வெளிவந்த பிகில் திரைப்படம் மக்களிடையே போதுமான வரவேற்பு பெற்று 300 கோடி வசூலைத் தாண்டியது.
தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் ரசிகர்கள் பல நல்ல விஷயங்களை செய்து வருகின்றனர். கன்னியாகுமாரி அருங்காட்சியகத்தில் தளபதி விஜயின் மெழுகுச் சிலையை வைத்துள்ளனர். தமிழகத்தில் இது போன்று நடிகர்களை பெருமைப்படுத்தும் விதமாக முதல் முறை இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் மறைமுகமாகவோ, நேரடியாகவோ மக்களுக்கு நல்ல பல விஷயங்களை செய்து வருகிறார். மக்கள் இயக்கத்தின் மூலம் பள்ளிகளுக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் செலவில் சிசிடிவி கேமரா, நூலகம், கழிவறைகளை சரிசெய்து சுத்தப்படுத்துவது போன்ற நல்ல திட்டங்களை செய்து வருகின்றனர்.
தளபதி விஜய் போலவே ரசிகர்களும் மக்கள் மனதில் இடம் பிடித்து வருவதால் அரசியலில் இவர் கால் பதித்தால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது தமிழ்நாட்டில் காலம் காலமாக நடந்து கொண்டிருப்பது தான். ஆனால் தற்போது ரஜினி கமலுக்கு இடையே போட்டியாக தளபதி விஜய் வருவார் என்று ரசிகர்கள், மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

thalapathy-vijay

thalapathy-vijay

thalapathy-vijay

thalapathy-vijay
