fbpx
Connect with us

Cinemapettai

பிரபல தயாரிப்பாளரை கண்டாலே தளபதி விஜய்க்கு பிடிக்காதாம்.. 15 வருடத்திற்கு முன்னாடி நடந்ததாக சொல்றாங்க

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல தயாரிப்பாளரை கண்டாலே தளபதி விஜய்க்கு பிடிக்காதாம்.. 15 வருடத்திற்கு முன்னாடி நடந்ததாக சொல்றாங்க

தளபதி விஜய் தனது 27 வருட சினிமா வாழ்க்கையில் ஏகப்பட்ட புதுமுக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அவர்களில் பலருக்கும் கஷ்டப்படும்போது கால்சீட் கொடுத்து அவ்வப்போது உதவி வருகிறார்.

இந்நிலையில் விஜய்யின் சினிமா கேரியரில் அவருக்கு மிக பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த பிரபல தயாரிப்பாளர் மீது தளபதி விஜய்க்கு செம கோவம் இருப்பதாக சமீபத்தில் பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது வீடியோ ஒன்றில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் அதர்வாவின் தம்பிக்கும் பிரபல நடிகர் விஜய்யின் மாஸ்டர் பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ என்பவரின் மகளுக்கும் சமீபத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் வழக்கத்திற்கு மாறாக தளபதி விஜய் மிகவும் குஷியாக காணப்பட்டாராம். ஆனால் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

அந்த விழாவிற்கு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் வந்ததால் தனது சந்தோஷத்தில் மண்ணு பள்ளி போடுவதற்கே வந்து இருக்காரு என தளபதி விஜய் சங்கடப்பட்டாராம். அந்த தயாரிப்பாளர் வேறு யாருமல்ல. தளபதி விஜய்யை வைத்து குஷி, கில்லி, சிவகாசி போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஸ்ரீ சூர்யா மூவிஸ், ஏ எம் ரத்னம் தானென அரசல் புரசலாக கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் சுக்ரன் படத்தின் போது சிறு மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். அதன்பிறகு விஜய் சூர்யா மூவிஸ் தயாரிப்பில் நடிக்க பெரிதும் விரும்பவில்லையாம். பலமுறை விஜய்யிடம் கால்சீட் கேட்டும் கொடுக்காததால் தான் அஜீத்தை வைத்து கிட்டத்தட்ட மூன்று படங்கள் தொடர்ந்து தயாரித்தார்.

ஆனால் வேதாளம் படத்தின்போது தல அஜீத்துக்கும் எம் ரத்னம்க்கும் இடையில் விரிசல் ஏற்பட்டதால் அவரது படங்களில் இனி அஜித் நடிக்க விரும்பவில்லை என்ற செய்தி அப்போதே வெளிவந்தது. சிலர் இல்லை என்று மறுத்தாலும் அவர்தான் என அடித்துச் சொல்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

இது உண்மையா இல்லையா என மீண்டும் இருவரையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்தால் தான் தெரியும்.

Continue Reading
To Top