Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஆத்தாடியோ! அதிரவைக்கும் சொத்து விபரம்!
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடித்து வந்த விஜய்க்கு பெரிதாக வெற்றிகள் கிடைக்கவில்லை. வெளி இயக்குனர்களிடம் சென்ற பிறகு தான் வெற்றிகள் குவிந்தன.
படத்திற்கு படம் சம்பளமும் வியாபாரமும் பெருகிக்கொண்டே போனது. தற்போது 100 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார். தளபதி விஜய்யின் சினிமா வருமானம் மட்டும் வருடத்திற்கு 150 கோடிகளுக்கும் மேல்.
தளபதி விஜய்க்கு பண்ணை ஊரில் ஒரு பிரம்மாண்ட தோப்பு வீடும், நீலாங்கரையில் ஒரு பெரிய பங்களா வீடும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் சென்னையில் திருமண மண்டபம், ரியல் எஸ்டேட் என வருமானம் வேறு வழியிலும் வருகிறது.
துப்பாக்கி படத்திற்கு முன்னர் வரை தளபதி விஜய் சம்பளப் பணத்தை முழுவதுமாக வாங்க மாட்டாராம். பாதி சம்பளமும், மீதி பாதிக்கு சென்னையில் தனக்கு பிடித்த இடத்தையும் வாங்கி விடுவாராம். சென்னையில் மட்டும் விஜய்க்கு 600 கோடிகளுக்கு மேல் சொத்து உள்ளது.
அதுமட்டுமில்லாமல் விஜய்யின் மனைவி சங்கீதா இலங்கை தமிழர் ஒருவரின் பிசினஸ்மேன் மகள். அவரது குடும்பம் அப்போதே லண்டனில் செட்டில் ஆனது. அங்கேயும் விஜய்க்கு அசையா சொத்துக்கள் வீதம் 300 கோடிகளுக்கு மேல் உள்ளதாம்.
சினிமா வருமானம் மட்டும் இல்லாமல் மற்ற வகைகளிலும் வருடத்திற்கு 300 முதல் 400 கோடி வருகிறது. தளபதி விஜய்யின் தற்போதைய அசையா சொத்துமதிப்பு மட்டும் சுமார் ஆயிரத்து 32 கோடி உள்ளது என்கிறது புள்ளி விவரம்.
இவை அனைத்துமே அசையா சொத்துக்கள் மட்டுமாம். பேங்கில் இருப்பதையெல்லாம் கணக்கு போட்டால் தலையே சுற்றி விடும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
