Tamil Cinema News | சினிமா செய்திகள்
என் ஆசையே சத்யராஜின் இந்த படத்தில் நடிக்கறதுதான்.. இது மட்டும் நடந்தால் தளபதிதான் நம்பர் ஒன்
தளபதி விஜய்க்கு அரசியல் ஆர்வம் அதிகமாக உண்டு என்பதை அவ்வப்போது மேடையில் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். ஆனால் கடைசியாக நடந்த மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் எந்த ஒரு அரசியல் உள்நோக்கம் இல்லாமல் பேசியிருப்பார்.
ஏனென்றால் அதற்கு சில தினங்களுக்கு முன்பு அவர் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு தான் காரணம். தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தளபதி விஜய் அப்போதைய அரசியல் களத்தை துல்லியமாக மக்களிடம் திரையில் நிருபித்த மணிவண்ணனின் அமைதிப்படை படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசையாம்.
சத்யராஜ், மணிவண்ணன், ரஞ்சிதா, கஸ்தூரி போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1994ல் வெளிவந்த படம் அமைதிப்படை. இதனை அவரே வெளிப்படையாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார், அந்த அளவிற்கு சத்யராஜ் கதாபாத்திரம் அவர் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
அமாவாசையாக சத்யராஜ் கோயில்களில் தேங்காய் போருக்கும் பைத்தியம் போல் நடித்து இருப்பார். பின்பு மணிவண்ணன் அவரை ஒரு அரசியல்வாதியாக மாற்ற வேண்டும் என்பதற்காக ராஜராஜ சோழன் பெயரை மாற்றி தேர்தலில் நிறுத்துவார்.
அதிலும் வெற்றி பெற்று மணிவண்ணனை அடிமையாக்கி விடுவார் ராஜராஜ சோழன் MA MLA (சத்யராஜ்). மணிவண்ணன் இயக்கத்தில் இந்த படம் பெரிதாக பார்க்கப்படுகிறது, ஏனென்றால் அரசியல் கருத்துக்களை இவ்வளவு தெளிவாக பதிவிடுவதற்கு, சினிமாவிலும் ஒரு தைரியம் துணிச்சலும் வேண்டும். அது மணிவண்ணனுக்கு அப்போதே வந்துவிட்டதாம்.
