Connect with us
Cinemapettai

Cinemapettai

வடிவேலுவுக்கு எழுதிய கதையில் நடித்த தளபதி விஜய்.. என்ன கொடும சரவணன் இது

vadivelu-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வடிவேலுவுக்கு எழுதிய கதையில் நடித்த தளபதி விஜய்.. என்ன கொடும சரவணன் இது

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்திற்கு தனது இயல்பான நடிப்பை வைத்து இன்றுவரை மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார் வைகைப்புயல் வடிவேலு. அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான ஒரு படத்தின் கதை முதலில் வைகைப்புயல் வடிவேலுக்கு எழுதப்பட்டதாம்.

எழில் இயக்கத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு ஆகிய பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் கதை யாருக்கு எழுதப்பட்டது என்ற செய்தியைக் கேட்டு தளபதி ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

தளபதி விஜயின் சினிமா வாழ்க்கையில் தலை நிமிர வைத்தது இந்த படம் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. அப்போது வடிவேலு கொடிகட்டி பறந்த காலம் என்பதால் அவருக்காக இயக்குனர் எழில் இந்த கதையை எழுதியுள்ளாராம், இதனை எழில் ஒரு பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

ஆனால் வெளிப்படையாக பார்க்கும்போது இந்த கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் காமெடி கதாபாத்திரத்தில் மட்டும் வடிவேலால் உயிர் கொடுக்க முடியும்.

ஆனால் சென்டிமெண்ட், நடனம் என்று பார்த்தால் கண்டிப்பாக இது சாத்தியமே இல்லை. அதுமட்டுமில்லாமல், இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே இசை, பாடல் வரிகள் அனைத்தும் இன்று வரை ரசிகர் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது, அப்படிப்பட்ட பாடல்களை கொண்டு வடிவேலின் கதாபாத்திரத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

வடிவேலுவை தாமுவின் காமெடி கதாபாத்திரத்திற்கு பதிலாக போட்டு இருந்தால்கூட ஒரு வகையில் சேர்த்துக்கொள்ளலாம் என்று ரசிகர்கள் விவாதம் செய்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top