Tamil Cinema News | சினிமா செய்திகள்
திரையரங்க உரிமையாளரை நேரில் வாழ்த்திய விஜய்..! புத்தாண்டுக்கு தளபதி ஸ்பெஷல் ஷோ!
தளபதி விஜய்க்கு கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த நெல்லை ராம் சினிமாஸ் தியேட்டர் ஓனர்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவரின் திரைப்படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தன் படத்தில் சமூக கருத்துக்களை கொண்ட வசனங்களை அவ்வப்போது பேசி வருகிறார். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

mersal
நடிகர் விஜய் குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடிக்கும் நடிகராக உள்ளார். இவரின் நடனம் ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் பிடிக்கும். இவரின் நடனத்தை பற்றி பேசாதவர்களே இல்லை என்று கூட கூறலாம். இவர் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச சிறந்த நடிகருக்கான விருதை வாங்கி இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்தார். சர்கார் படத்தின் மூலம் அரசியலில் நடக்கும் அவலங்களை பற்றி கூறியுள்ளார் இதனால் பல தரப்பட்ட பிரச்சனைகளையும் சந்திக்க நேரிட்டார்.
Merry Xmas & Happy New Year Wishes Thalapathy @actorvijay
Special thanks to @Jagadishbliss for making this happen @BussyAnand #Ramu sir pic.twitter.com/9rzExcoOLE
— Ram Muthuram Cinemas (@RamCinemas) December 26, 2018
நடிகர் விஜயின் படங்களை கொண்டாடுவதில் முத்துராம் சினிமாஸ் தவறியதே இல்லை என்று கூட கூறலாம். நடிகர் விஜயின் படம் வந்தால் இந்த திரையரங்கம் முதலில் வாங்கி வெளியிட உரிமை பெற்றுக் கொள்ளும். தற்போது கிறிஸ்மஸ் தின விழாவையொட்டி திரையரங்கின் உரிமையாளர் நடிகர் விஜய்யை நேரில் பார்க்க சென்றுள்ளார்.
நடிகர் விஜயிடம் கிறிஸ்மஸ் வாழ்த்து கூறிவிட்டு அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த விஜய் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர். வரும் புத்தாண்டுக்கு தளபதி விஜயின் படங்களை முன் பதிவு இப்பவே செய்து கொள்ளலாம். புது வருடத்தை வரவேற்கும் விதமாக தளபதி விஜய்யை கொண்டாடி வருகின்றார் ராம் முத்துராம் சினிமாஸ் உரிமையாளர் மற்றும் ரசிகர்கள்.
