Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சார் ‘சூப்பர் ஸ்டார்’.. நம்பவே முடியவில்லை.. குணம் குறித்து மெய்சிலிர்க்கும். ஆண்ட்ரியா
நடிகை ஆண்ட்ரியா தளபதி விஜய்யின் 64 படத்தில் நடித்து வருவது ஊரறிந்த விஷயம். சிறந்த பாடகியான ஆண்ட்ரியா, கதையம்சம் நிறைந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் பேசப்பட்டாலும் தரமணி படம் நிச்சயம் பெயர் சொல்லும் படமாக அமைந்தது.
இந்நிலையில் ஆண்ட்ரியா பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை டைம்ஸ்க்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தளபதி 64 படம் பற்றியும், அடுத்தடுத்து நடிக்க உள்ள படம் பற்றியும் கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு பதில் அளித்த ஆண்ட்ரியா, கா ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறேன். அதன் பின்னர் வட்டம் மற்றும் மாளிகை ஆகிய இரண்டு படங்களில் நடிக்க உள்ளேன். இந்த படங்கள் பீரியட் பேண்டஸி திகில் படங்கள் ஆகும். வரும் ஆண்டில் புதிய ஓரிரு புதிய படங்களிலும் வேலை செய்ய போகிறேன்.
தற்போது நான் விஜய்யின் திரைப்படத்தின் (தளபதி 64) படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறேன். இந்த படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரத்தைப் பற்றி என்னால் எதுவும் இப்போது சொல்ல முடியாது, ஆனால் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.
அவர் மிகவும் நம்பிக்கைக்குரிய திறமைசாலி. விஜய் ஒரு சூப்பர் ஸ்டார், அவர் நம்பமுடியாத அளவிற்கு எல்லோரிடமும் பணிவாக இருக்கிறார். அவருடன் பணிபுரிந்த பிறகு நான் அவரது ரசிகராகிவிட்டேன் என்றார்.
