Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதிக்கு பிடித்த கேம் என்ன தெரியுமா? ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சுவாரசியம்

விஜயிற்கு பிடித்த கேம் குறித்த சுவாரசிய தகவலை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டு இருக்கிறார்.
தளபதி விஜயிற்கு தமிழ் சினிமாவில் இன்று வரை ஒரு தனி இடம் இருக்கிறது. அவரின் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் தான். ஆனால், அந்த புகழை எப்போதுமே தலைக்கு மேலே ஏற்றமாட்டார். எப்போதுமே என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள் என்ற வார்த்தையை நிஜத்திலும் செயல்படுத்தி வருகிறார். சமீபகாலமாக, தமிழகத்தில் அதிகமாகி வரும் சமூக பிரச்சனைக்கு நட்சத்திரங்களில் இருந்து எந்த ஆரவாரமும் இல்லாமல் முதல் ஆளாக நிற்கிறார்.
ஒரு பக்கம் தன் துறையிலும் பல சாதனைகளை புரிந்து வருகிறார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். முதல்முறையாக இப்படத்தில் விஜய் செம க்யூட்டான லுக்கில் வலம் வர இருப்பதால் படத்திற்கு இப்போதே ரசிகர்களிடம் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் கூட்டணியில் உருவாகும் எல்லா படங்களுமே சமூக பிரச்சனையை தான் அதிகமாக பேசும் என்பதால் இப்படமும் ஒரு சமூக பிரச்சனையை கதை பின்னணியாக கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், விஜயிற்கு ப்ளைட் ஸ்டிமுலேட்டர்(Flight Simulator) என்ற கேம் தான் அதிகமாக பிடிக்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பில் அதை தான் தன் ப்ரீ டைம்மில் விரும்பி விளையாடுவார் என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்து இருக்கிறார். இனிமே தளபதியன்ஸும் விளையாடணுமே.
