Vijay : ஜூன் மாதம் நடக்க போகும் தமிழக வெற்றிக் கழக கூட்டம்.. மீண்டும் தொடங்கும் விஜய்யின் அன்பு பரிசு

விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விஜய் வாக்களித்ததே மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் 2026 இல் சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டி போட இருக்கிறார்.

அதற்கான வேலையில் தான் இப்போது ஆயத்தம் ஆகி வருகிறார். ஒருபுறம் படப்பிடிப்பிலும் பிஸியாக இருக்கிறார். கோட் படத்தின் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. அடுத்ததாக விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்யும் பணிகளும் இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மற்றும் மாணவியருக்கு விஜய் தனது இயக்கம் சார்பில் விருது மற்றும் பரிசுகளை வழங்கி இருந்தார். அதுவும் தொகுதி வாரியாக தான் மாணவர்கள் பிரிக்கப்பட்டு இருந்தனர்.

அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பரிசு வழங்கப் போகும் தளபதி

அதிலும் குறிப்பாக பிளஸ் டூ தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல்லைச் சேர்ந்த நந்தினிக்கு வைர நெக்லஸை தளபதி பரிசாக கொடுத்திருந்தார். மேலும் நேற்றைய தினம் பிளஸ் டூ ரிசல்ட் வந்துள்ளது. aகடந்த வருடம் ஜூன் 17ஆம் தேதி இந்த நிகழ்ச்சியை விஜய் ஏற்பாடு செய்திருந்தார்.

அதேபோல் இந்த வருடமும் ஜூன் மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தேர்ந்தெடுத்து தொகுதி வாரியாக பரிசு வழங்க இருக்கின்றனர். கண்டிப்பாக இதில் வித்தியாசமாக எதிர்பார்க்காத பல விஷயங்களை விஜய் பேச இருக்கிறார்.

ஏனென்றால் கடந்த முறை இந்நிகழ்ச்சியில் நடந்த போதே அரசியலுக்காக தான் விஜய் இவ்வாறு செய்கிறார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் இப்போது அரசியல் கட்சியின் தலைவராக தான் விஜய் இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்