Connect with us

Cinemapettai

தளபதியின் அடுத்த மூன்று படங்களின் டைரக்டர்கள் இவர்கள்தான்.. லிஸ்ட் மொரட்டுத்தனமா இருக்கே!

vijay-67-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதியின் அடுத்த மூன்று படங்களின் டைரக்டர்கள் இவர்கள்தான்.. லிஸ்ட் மொரட்டுத்தனமா இருக்கே!

தளபதி விஜய்(vijay) நடிப்பில் கடைசியாக வெளியான மூன்று படங்களும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் அதிர வைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் விஜய் படத்தின் பிசினஸ் 200 கோடி வரை இருப்பதால் அவரை வைத்து தயாரித்த தயாரிப்பாளர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தளபதி விஜய்யின் அடுத்தடுத்த மூன்று படங்களை இயக்கப்போவது யார் என்ற விவரங்களை பார்ப்போம்.

தளபதி 65

சர்கார் படத்துக்கு பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்க போகிறார் என தகவல்கள் வெளியாகி விட்டது. இன்னமும் அறிவிப்பை வெளியிடாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் யாருடன் ஐஸ் பாய் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

தளபதி 66

தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை பெரும்பாலும் கிராமத்து இயக்குனர் பாண்டியராஜ் இயக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது. இல்லையென்றால் மகிழ்திருமேனி இயக்கவும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

தளபதி 67

மாஸ்டர் படத்தை தயாரித்து விநியோகம் செய்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமாருக்கு கண்டிப்பாக ஏதாவது ஒரு வகையில் கொஞ்சமாவது நஷ்டம் ஏற்படும் என சினிமா வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் தளபதி விஜய் மீண்டும் லலித் குமாருக்கு ஒரு படம் பண்ண உள்ளாராம். பெரும்பாலும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாம்.

சாரி.. நீங்கள் தேடும் அட்லீக்கு இந்த லிஸ்டில் இடம் கிடையாது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top