Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்த இயக்குனருடன் விஜய் கூட்டணி சேர்ந்தால் படம் 700 கோடி வசூல் செய்யும்.. மனக் கோட்டை கட்டும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். அதுமட்டுமில்லாமல் தற்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்யும் படங்கள் கொடுக்கும் நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இந்த கொரானா சூழ்நிலையிலும் கூட 240 கோடிக்கு மேல் வசூல் சாதனையை செய்துள்ளது மாஸ்டர் திரைப்படம்.

அந்தவகையில் அடுத்ததாக தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தளபதி 65 படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் விஜய். இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 400 என்பதை பதிவு செய்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் 400 கோடி வசூலுக்கு ரெடியாக இருங்கள் என பரப்பிவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருடன் இந்தியாவே கலக்கும் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளாராம் விஜய். இந்த கூட்டணி அமைத்தால் அந்த படம் 500 கோடி வசூல் செய்யுமாம்.

அதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தில் விஜய் வெற்றிமாறன் கூட்டணி இணைய உள்ளதாம். இந்த கூட்டணி மட்டும் அமைந்தால் இந்தியா முழுவதும் விஜய்யின் படம் 700 கோடி வசூல் செய்யுமாம்.

vijay-fans-meme

vijay-fans-meme

இவ்வாறு சமூக வலைதளங்களை விஜய் ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். விஜய்யின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படம் பிகில் தான். அந்த படம் கிட்டத்தட்ட 300 கோடி வரை வசூல் செய்தது.

300 கோடி வசூல் செய்தும் அட்லீயால் தயாரிப்பு தரப்பு கொஞ்சம் நஷ்டத்தை சந்தித்ததாக தற்போது வரை ஒரு பேச்சுள்ளது குறிப்பிடத்தக்கது. வருங்காலங்களில் விஜய்யின் படங்கள் கண்டிப்பாக மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இப்போதே மனக்கோட்டை கட்டுவதை தான் மற்ற ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Continue Reading
To Top