Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி 65 படத்திற்கு இசையமைக்கும் விஜய்யின் வெறித்தனமான ரசிகர்.. பண்டிகையை கொண்டாடும் ரசிகர்கள்
தளபதி ரசிகர்கள் மாஸ்டர் படத்தை எந்த அளவு எதிர்பார்க்கிறார்களோ அதை விட ஒரு படி மேல் தளபதி 65 படத்தின் இயக்குனர் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தளபதி 65 படத்தை தயாரிக்கப் போவது சன் பிக்சர்ஸ் தான் என்பது உறுதியான நிலையில் இயக்குனர் யார் என்ற தேடலில் இறுதியாக இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா என்பது உறுதியாகி உள்ளது.
இருந்தும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் தயாரிப்பு தரப்பிலிருந்து வெளிவரவில்லை. மாஸ்டர் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்தபின்னர் அந்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தளபதி 65 படத்திற்கு இசையமைக்க போவது தளபதி விஜய்யின் தீவிர ரசிகரான ஜிவி பிரகாஷ் தான் என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே பட்டும் படாமல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, அவசரப்பட்டு அதைப்பற்றி முன்னாடியே பேச வேண்டாம் எனவும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தளபதி 65 படத்திற்கு இசையமைப்பது ஜிவி பிரகாஷ் தான் என்பது உறுதியாகியுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர். ஜிவி பிரகாஷ் ஏற்கனவே தலைவா, தெறி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
