Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி65 படத்திற்காக சூப்பர் ஸ்டாருக்கு இணையான சம்பளம்.. மாஸ் பண்ணும் தளபதி
தளபதி விஜய்யின் மார்க்கெட் படத்திற்கு படம் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. ரஜினியை அடுத்து அதிக அளவு வசூல் செய்யும் நாயகனாக தமிழ் சினிமாவில் உயர்ந்து வருகிறார். கடந்த வருடம் வெளியான பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நம்பர்1 வசூல் மன்னனாக உருவெடுத்தார்.
இதனால் தளபதி விஜய் நடித்து வரும் படங்களுக்கு படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போது பல வியாபாரம் நடந்து முடிவது சமீபத்தில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் தற்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.
மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு அன்று வெளியாகி பெரிய ஹிட் அடித்தது. இதனால் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. அதை தவிர மாஸ்டர் படத்தின் எந்த வித செய்திகளும் தற்போது வரை வெளிவரவில்லை.
ஆனால் அதற்கு முன்னரே தளபதி 65 படத்தின் பேச்சுக்கள் கோலிவுட்டில் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் இறுதிக்கட்டமாக தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன.
மேலும் தளபதி 65 படத்திற்கு தளபதி விஜய்யின் சம்பளம் கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் சம்பளத்திற்கு இணையாக வழங்கப்படும் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.
