Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி 64 படத்தில் இணைந்த விஜய்யின் தீவிர ரசிகர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தளபதி விஜய் தற்போது பிகில் படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். படக்குழுவும் அவருக்கு ஏற்றாற்போல் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துள்ளது. தளபதி 64 படத்திற்கான அப்டேட்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
மூன்று நாளில் மூன்று அப்டேட் என அறிவிக்கப்பட்ட தளபதி 64 படத்தின் படக்குழு, முதல் அப்டேட் ஆக விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கிறார் என அறிவித்தனர்.
இந்த அப்டேட் ரசிகர்களை பேரானந்தத்தில் ஆழ்த்தியது. இரண்டாவது அப்டேட் ஆக மலையாள நடிகர் வர்கீஸ் படத்தில் இணைந்ததாக அறிவிப்பு வெளியானது.
இன்று 2 அப்டேட்கள் விடப்படும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அது என்ன அப்டேட் ஆக வரும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் விஜய்யின் தீவிர ரசிகரான பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகனுமான நடிகர் சாந்தனு, கல்லூரி மாணவன் ரோலில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

shanthanu-vijay
