Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெட்டருவா மீசையுடன் வேட்டையாடத் தொடங்கிய விஜய் புகைப்படம்.. தளபதி 64 கொல மாஸ்
தளபதி விஜய் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட புகழ் நடிகை மாளவிகா மோகனன் நடிக்க இருக்கிறார். விஜய் சேதுபதி, விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார்.
கத்தி படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் அனிருத், விஜய் உடன் இணைவதால் படத்தின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறிக் கிடக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு டெல்லியில் முகாமிட்டுள்ளது.
இந்நிலையில் விமான நிலையத்தில் தளபதி விஜய் வித்தியாசமான மீசையுடன் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் சும்மா விடுவார்களா? அடிச்சு புடிச்சு போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர்.
கைதி படத்தின் வெற்றியால் மிகவும் குஷியாக உள்ள லோகேஷ் கனகராஜ், சுறுசுறுப்பாக தளபதி-64 படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் கவனத்தை செலுத்தியுள்ளார்.
வருகிற புத்தாண்டுக்கு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளிவிடலாம் என தயாரிப்பு தரப்பில் பேசி வருகின்றனர்.
இதோ புகைப்படம் :

thalapthy-vijay-64
