fbpx
Connect with us

Cinemapettai

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் தளபதி விஜய்யின் வீடு.. செலவை கேட்டால் தலை சுற்றி போகும்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் தளபதி விஜய்யின் வீடு.. செலவை கேட்டால் தலை சுற்றி போகும்

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர்-1 வசூல் மன்னனாக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சர்கார், மெர்சல், பிகில் போன்ற படங்கள் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனையைப் படைத்தது.

அதேப்போல் படத்திற்கு படம் தளபதி விஜய்யின் சம்பளமும் எக்குத்தப்பாக ஏறிக்கொண்டே செல்கிறது. பிகில் படத்திற்கு 50 கோடியும், மாஸ்டர் படத்திற்கு 80 கோடியும் சம்பளம் வாங்கியுள்ளதாக வருமான வரித்துறையினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டனர்.

தளபதி விஜய்க்கு புதிய புதிய கார்கள் வாங்குவதில் மோகம் அதிகம் என அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் தற்போது தளபதி விஜய்க்கு உலகத்தரத்தில் ஒரு வீடு கட்ட வேண்டும் என நீண்ட நாள் ஆசையாக இருந்ததாம்.

அதற்காக தற்போது சென்னை கடற்கரை சாலையில் உள்ள இவரது சென்டிமென்டான பழைய வீட்டை தற்போது நவீன உலகத்தரத்தில் உருவாக்கி கொண்டிருக்கிறாராம். நீச்சல் குளம் முதல் லேசர் அமைப்பு வரை அனைத்தும் உள்ளதாம்.

அந்த வீட்டிற்காக தளபதி விஜய் கிட்டத்தட்ட நூறு கோடி வரை செலவு செய்து வருவதாக தளபதியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மாஸ்டர் படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அந்த வீட்டில் குடியேறி இருப்பதாக விஜய் முடிவு எடுத்தாராம்.

கொரானா காரணமாக மாஸ்டர் படத்தின் வெளியீட்டில் மாற்றங்கள் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதத்தில் அந்த வீட்டிற்கு விஜய் குடிபெயர இருப்பதாக தளபதியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top