Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்த வருடம் 2 படம் 600 கோடி வசூல்.. அசத்தல் பிளான் போட்டுள்ள தளபதி விஜய்.. ஆப்பு அடிக்காமல் இருந்தால் சரி
இதுவரை இல்லாத அளவுக்கு தளபதி விஜய்யின் படம் சிக்கலில் சிக்கி அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பிரச்சினைகள் இருந்தபோதும் சொன்ன தேதியில் வெளியான படம் தற்போது அவரே எதிர்பார்க்காத நிலையில் தள்ளிக்கொண்டு செல்கிறது.
தியேட்டர்கள் விரைவில் திறந்தாலும் தியேட்டர்களுக்கு மக்கள் வருவார்களா என்பது சந்தேகமாக உள்ளது. இதன் காரணமாக சகஜமான நிலை திரும்பிய பிறகு படத்தை வெளியிடலாம் என மனதை தேற்றிக் கொண்டு விட்டாராம் விஜய்.
அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு தளபதி விஜய்க்கு பொன்னான ஆண்டாக அமையப் போகிறது என்கிறது கோலிவுட் வட்டாரம். 2021 ஆம் ஆண்டு தளபதி செம பிளான் வைத்திருப்பதாக தெரிகிறது.
தீபாவளிக்கு வெளியீட இருந்த மாஸ்டர் படத்தை அப்படியே நிறுத்திவிட்டு நேரடியாக 2021 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்துவிடலாம் என பக்காவா ஸ்கெட்ச் போட்டுள்ளார் விஜய்.
அதுமட்டுமில்லாமல் 2021 தீபாவளிக்கு விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தளபதி65 படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளார். விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் நான்கு படங்களும் தீபாவளிக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கண்டிப்பாக கிட்டத்தட்ட 600 கோடிக்கும் மேல் வசூல் பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்துள்ளாராம் விஜய். விஜய்யின் இந்த பிளான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் இந்த பிளானில் எந்த ஒரு பிரச்சனையும் அவரது கற்பனைக்கு ஆப்பு அடிக்காமல் இருந்தால் சரி என்கிறது கோலிவுட் வட்டாரம்.
