Tamil Cinema News | சினிமா செய்திகள்
லீக்கான மாஸ்டர் படத்தின் கதை.. ஜாக் டானியலுடன் மிரட்ட போகும் விஜய்.. சம்மர் தாறுமாறு
விஜய் என்றாலே கமர்சியல் படம்தான் என்றாகிவிட்டது. அவரைச் சொல்லியும் குற்றமில்லை. மக்கள் அவரிடம் எதிர்பார்ப்பதும் அதைத்தான். அதுமட்டுமல்லாமல் முன்னணி நடிகர்கள் அனைவருமே கதையில் கமர்சியல் அம்சங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
அந்தவகையில் மாநகரம், கைதி என்ற இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். பாடல் காட்சிகளை கொடுத்து மக்களை சலிப்படைய வைக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர். அப்படியே பாடல் இருந்தாலும் ஒன்று அல்லது இரண்டு தான். துருதுருவென படத்தை கொண்டு போவதில் அவருக்கு நிகர் அவர்தான். அந்த வகையில் தான் தற்போது மாஸ்டர் படமும் உருவாகியுள்ளது.
மாஸ்டர் கதைச்சுருக்கம்
மாஸ்டர் படத்தின் கதையில் தளபதி விஜய் குடிப்பழக்கம் அதிகம் உடையவர். கல்லூரி பேராசிரியராக இருக்கும்போது வகுப்பறைகளுக்கு மது அருந்தி விட்டு செல்வதால் கல்லூரியில் இருந்து நீக்கப்படுகிறார். பிறகு சிறுவர் சீர்திருத்த சிறை காவலராக பணியில் அமர்த்தப்படுகிறார்கள். அங்கு சிறுவர்களை வைத்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்றவை நடந்து வருகிறது. இதை கவனித்த விஜய் அதை யார் செய்வது என்பதை கண்டறிகிறார்.
அந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவராக விஜய் சேதுபதியும் அவருக்கு வலது கையாக அர்ஜுன் தாஸ் என்பவரும் இருப்பதை தெரிந்து கொண்டு அவர்களை எப்படி பிடிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் திரைக்கதையை இயக்கி வருகிறாராம் லோகேஷ் கனகராஜ். கல்லூரி பேராசிரியர் வேடத்தை பிளாஷ்பேக் காட்சிகளாக உருவாக்கியுள்ளனர். மேலும் நாளை வெளிவர இருக்கும் ஒரு குட்டி கதை பாடல் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் காவலராக இருக்கும் விஜய்க்கு ஓபனிங் பாடலாகவும், அதேபோல் கல்லூரி பேராசிரியர் கேரக்டருக்கும் ஒரு ஓப்பனிங் பாடல் வைத்துள்ளதாகவும் இடையில் ஒரே ஒரு காதல் பாடல் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக மாஸ்டர் படத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
படத்தில் பின்னணி இசை பயங்கரமாக இருக்க வேண்டுமென்பதற்காக அனிருத் இடம் இதுவரை எந்த இயக்குனரும் வேலை வாங்காத அளவுக்கு பெண்டை நிமிர்த்தி உள்ளாராம் லோகேஷ். கைதி படத்திலும் போதைப்பொருளை மையமாக வைத்துதான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். மொத்தம் மூன்று பாடல்கள் மட்டுமே உள்ள திரைப்படத்திற்கு தேவையில்லாமல் ஆடியோ வெளியீட்டு விழா நடத்த வேண்டாம் என விஜய் தரப்பில் கூறப்பட்டதாகவும், தற்போது நடந்த ஐடி ரெய்டுக்கு பிறகு ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும் எனவும் தெரிகிறது.
அப்படியே நடைபெற்றாலும் இந்த வாட்டி சென்னையில் நடைபெற வாய்ப்பே இல்லை. கோயம்புத்தூரை தேர்ந்தெடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. எப்படியோ இதுவரை விஜய்யை ஒரே மாதிரி காட்டிக்கொண்டிருந்த இயக்குனர்களிடம் இருந்து சற்று வித்தியாசமாக போக்கிரி படத்தில் பார்த்த அதே தெனாவெட்டுடன் இருக்குமாறு விஜய்யின் கதாபாத்திரத்தை அமைத்துள்ளார் லோகேஷ்.
மேலும் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தை எடுத்த விதமும், தயாரிப்பாளருக்கும் நடிகர்களுக்கும் எந்தவித அழுத்தமும் தராமல் நேர்த்தியாக நடந்து கொண்ட விதமும் தளபதி விஜய்க்கு பிடித்துள்ளதால் கண்டிப்பாக மாஸ்டர் படக்குழு ரிட்டன் ஆக வாய்ப்புள்ளதாக விஜய்யின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்மர் விஜய்க்கு சூப்பர் கலெக்ஷன் மா!
