fbpx
Connect with us

Cinemapettai

விஜய்யை சினிமாவை விட்டு ஒதுக்கி விடலாமா என யோசிக்க வைத்த தோல்வி படங்கள்.. எவை தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யை சினிமாவை விட்டு ஒதுக்கி விடலாமா என யோசிக்க வைத்த தோல்வி படங்கள்.. எவை தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருக்கும் விஜய் ஒரு காலத்தில் ஏண்டா சினிமாவுக்கு வந்தோம் என்கிற அளவுக்கு யோசிக்க வைக்கும் பிளாப் படங்களை கொடுத்துள்ளார். அவைகள்:

விஜய்யின் முதல் படமாகிய நாளைய தீர்ப்பு பயங்கர தோல்வி. அதனை தொடர்ந்து வெளிவந்த சந்திரலேகா, விஷ்ணு, ராஜாவின் பார்வையிலே போன்ற அனைத்து படங்களும் படுதோல்வியை சந்தித்தது.

பூவே உனக்காக படத்தின் வெற்றியில் சிலகாலம் சரியாக சென்று கொண்டிருந்த விஜய்க்கு நெஞ்சினிலே, பத்ரி, ஷாஜகான், யூத், தமிழன் போன்ற படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றியை பெறவில்லை.

தொடர்ந்து அடி மேல் அடியாக மதுர, அழகிய தமிழ் மகன், உதயா, வில்லு, குருவி, வேட்டைக்காரன் போன்ற படங்கள் தோல்வியை தழுவின. அதிலும் 50வது படமான சுறா தோல்வியடைந்த பின்னர் சினிமாவில் நடிக்கவே வேண்டாம் என்னும் அளவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின.

அதன்பிறகும் காவலன், தலைவா, புலி, பைரவா போன்ற படங்களும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. இவற்றையெல்லாம் மீறி தற்போது தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகராக வளர்ந்துள்ளார். மேலும் தற்போதைய வசூல் மன்னனாகவும் தமிழ் சினிமாவில் உயர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குனரின் மகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருந்தாலும் பல தோல்விகளால் அடிபட்டு தற்போது முன்னணி நாயகர் அளவுக்கு வளர்ந்து இருக்கும் விஜய்யை அவரது ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.

வரலாம் வரலாம் வா..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top