fbpx
Connect with us

Cinemapettai

கமல் ஸ்டைலில் தளபதி 64 படம்.. படு மாஸான கேரக்டரில் விஜய்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமல் ஸ்டைலில் தளபதி 64 படம்.. படு மாஸான கேரக்டரில் விஜய்

தளபதி விஜய் ஆரம்பத்திலிருந்தே இளம் இயக்குனர்களுக்கு படம் இயக்க வாய்ப்பு கொடுப்பதில் வல்லவர். அந்த வகையில் தற்போது மாநகரம், கைதி ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டெல்லியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அவ்வப்போது படப்பிடிப்பிலிருந்து புகைப்படங்கள் வெளியான வண்ணம் இருந்தன.

இந்நிலையில் படப்பிடிப்பிலிருந்து தளபதி 64 படத்தின் கதை கசிந்து உள்ளதாக தகவல்கள் வந்தன. அதனடிப்படையில் தளபதி 64 படம் இதற்கு முன் கமலஹாசன் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த நம்மவர் படத்தின் கதையுடன் பொருத்தமாக உள்ளதாம்.

மேலும் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் பெரிய ரசிகர் என்பதால் அந்த செய்தி உண்மையாக இருக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது. இதற்கு முன் அட்லீ, விஜய் இணைந்த மெர்சல் திரைப்படம் கமலஹாசனின் அபூர்வசகோதர்கள் படத்தை சார்ந்ததாக இருக்கிறது என ஒரு கூட்டம் கிளப்பிவிட்டது அனைவரும் அறிந்ததே.

ஆனால் கமல்ஹாசனை அந்த படத்தைப் பார்த்துவிட்டு இதற்கும் அபூர்வசகோதரர்கள் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top