Tamil Cinema News | சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜின் ஸ்கிரிப்ட் திறமையை புகழ்ந்து தள்ளும் விஜய்.. அனேகமா அடுத்த படமும்?
நாளுக்கு நாள் சூட்டிங் ஸ்பாட்டில் லோகேஷ் கனகராஜின் திறமையை கண்டு வியந்து வருகிறார் தளபதி விஜய். அதே சமயத்தில் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்துகொள்ளும் விதமும் தளபதியை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதனால் தயாரிப்பாளரிடம் நினைத்த பட்ஜெட்டைவிட குறைவாகவே எடுத்துக் கொடுத்து விடுவார் என மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளாராம் தளபதி. சென்னையில் முதல் ஷெட்யூலை முடித்து விட்டு டெல்லி சென்ற படக்குழு அங்கே காற்று மாசுபாடு காரணமாக படப்பிடிப்பை தொடர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் மங்களூருவில் அதற்கான செட் அமைத்து அடுத்தவாரம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தளபதியின் முழுமையான யோசனை என்னவென்றால் அடுத்த படத்தையும் லோகேஷ் கனகராஜ்க்கு கொடுக்கலாமா? என்பதுதான்.
சமீபத்திய இயக்குனர்களில் திரைக்கதையை வலுவாக கொடுப்பதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் லோகேஷ். அதன் வெளிப்பாடுதான் மாநகரம், கைதி போன்ற வெற்றிப் படங்கள்.
அதில் கைதி படம் 100 கோடி வசூலை ஈட்டி லோகேஷ்க்கு பெரிய மரியாதையை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறலாம்.
டபுள் ட்ரீட்க்கு தயாராகும் தளபதி ரசிகர்கள்.. போடு தகிட தகிட.!
