fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சிவகார்த்திகேயனுக்கு வில்லியான விஜய் ஹீரோயின்.. வாய்ப்பு இல்லதான்! அதுக்காக இப்படியா?

sivakarthikeyan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு வில்லியான விஜய் ஹீரோயின்.. வாய்ப்பு இல்லதான்! அதுக்காக இப்படியா?

தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாத நடிகைகள் சமீபகாலமாக கேரக்டர் ரோல்களில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். அப்படி விஜய்க்கு ஹீரோயினாக நடித்த நடிகை ஒருவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக நடிக்கும் செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன், ரகுல் பிரீட் சிங், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். வேற்று கிரகவாசிகளை மையமாகக்கொண்டு ஏலியன் படமாக உருவாகும் இந்த படத்தை இன்று நேற்று நாளை பட புகழ் ரவிக்குமார் இயக்குகிறார். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த இந்த படத்தில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேற்று கிரக வாசியாக ரோபோ கலந்த கதாபாத்திரத்தில் விஜய் உடன் நெஞ்சினிலே படத்தில் ஹீரோயினாக நடித்த இஷா கோபிகர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

isha-koppikar

isha-koppikar

இதன் மூலம் தமிழ்சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் விஜயகாந்துக்கு ஜோடியாக நரசிம்மா படத்திலும் நடித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top