Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதியின் சூப்பர் ஹிட் இயக்குனருக்கே இந்த நிலைமையா.? விடாமல் துரத்தும் பிரச்சனைகள்!

தளபதியின் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் போன்ற படங்கள் ரசிகர்களில் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் வசூல் சாதனை படைத்தது.
இப்படி இருக்க நான்காவதாக விஜய்யின் அடுத்து 65வது படத்தை இயக்கப்போவதாக இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு தவறி விட்டது, ஏனென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தர்பார் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்பது தான் முக்கிய காரணம்.
இதனால் முருகதாஸின் சம்பள பிரச்சனை தொடங்க ஆரம்பித்தது. தற்போது கோலிவுட்டில் ஏதாவது ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்ற நம்பிக்கையில் முன்னணி ஹீரோக்களிடம் கதை சொல்லி வருகிறார் முருகதாஸ் .
ஆனால் ஒரு சிலர் இவருடன் நடிப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அல்லு அர்ஜுனிடம் முருகதாஸ் ஒரு கதையைக் கூறி உறுதி செய்து உள்ளாராம்.
ஆனால் இப்போது எடுக்க முடியாது என்றும் 2 படங்கள் கமிட் ஆகியுள்ளதால் அதை முடித்துவிட்டு உங்கள் படத்திற்கு கால் சீட் தருகிறேன் என்பது போன்று தெரிவித்துவிட்டாராம். இதனால் மிகுந்த வருத்தத்தில் உள்ளார் முருகதாஸ்.

vijay-murugadass-cinemapettai
இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வரும் தளபதி விஜய், முருகதாஸ் உடன் கண்டிப்பாக ஒரு படத்தில் நடித்து வெற்றி கொடுப்பார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
