Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்க்கு கிடைத்த மற்றுமொரு பெருமை.. யார் காரணம் தெரியுமா?
Published on
தளபதியை மிஞ்சும் சாஷாவின் சாதனை..!
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று கூறுவார்கள் அதேபோல் தளபதி விஜய்யின் மகள் தனது பள்ளிப் பருவத்தில் சாதனை படைத்துள்ளார்.
தளபதி விஜய் தற்போது நடித்து வெளிவந்த சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அட்லியுடன் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு முழுமையாக முடிந்து விட்டது.
இப்படம் விளையாட்டு சம்பந்தப்பட்ட கதை களமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
விஜய் தனது வேலையில் எவ்வளவு ஆர்வம் உள்ளதோ அதேபோல் தனது குடும்பத்தின் மேல் உள்ள பாசம் குறையாமல் பார்த்துக் கொள்வார்.
விஜய்யின் மகள் பேட்மிண்டன் விளையாட்டில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார் என்பதை அப்பள்ளி நிர்வாகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இது தளபதி விஜய்யை பெருமைப்படுத்தி ரசிகர்களையும் கொண்ட வைத்துள்ளது.
