Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் பிறந்தநாளில் சத்தமில்லாமல் சூர்யா செய்த சாதனை…

தளபதி தன் பிறந்தநாளை சிறப்பித்து கொண்டு இருக்கும் இந்நாளில் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த சொடக்கு பாடல் சூப்பர் சாதனையை படைத்து இருக்கிறது.

surya
தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானவர் சூர்யா. இவருக்கு ரசிகர்களை விட ரசிகைகள் தான் அதிகம். காரணம் எப்போதுமே லவ்லி பாய் லுக்கில் இருப்பவர். இப்படி தனக்கென ஒரு படையையே உருவாக்கி வைத்து இருக்கிறார். இது அவரின் நடிப்புக்காக மட்டுமல்லாமல் அவரின் உண்மையான மனதுக்கும் சேர்த்து தான் பலர் இவருக்கு ஹார்ட்டீன்களை குவித்து வருகிறார்கள். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறாஅர். இப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு விட்டது.
முன்னதாக, தை திருநாளை முன்னிட்டு இவர் நடிப்பில் வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யா நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் நடித்து இருந்தனர். தொடர்ந்து, கார்த்தி, சுரேஷ் மேனன், செந்தில், ரம்யா கிருஷ்ணன், சத்யன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். அனிருத் இசையமைத்தார். படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாஸ் வெற்றியை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடல் பட்டிதொட்டிகளில் பட்டையைக் கிளப்பியது. இருந்தும் அப்பாடலில் இடம்பெற்று இருந்த ஒரு வரிக்காக நீதிமன்றம் படியேறியதெல்லாம் தனிக்கதை தான். எனினும் எந்த தடையும் இல்லாமல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் செம லைக்ஸ் குவிந்தன.
இந்நிலையில், இப்பாடலை யு ட்யூப்பில் இதுவரை 50 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்து இருக்கிறார்கள். இதுகுறித்த, போஸ்டர் தற்போது இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஜய் பிறந்தநாளில் சூர்யாவும் ட்ரெண்ட்டில் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
