Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதியின் பிறந்தநாளுக்கு இருக்கும் மாஸ் ட்ரீட்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு மாஸ் ட்ரீட் தயாராகி வருவதால் அவரின் ரசிகர்கள் செம குஷியில் இருப்பதாக தெரிகிறது. விஜய் என்ற ஒற்றை வார்த்தைக்கு ரசிகர்கள் இங்கு ஏராளம். தந்தை ஏற்றி விட்டு தமிழ் சினிமாவிற்குள் வந்தாலும், அவரின் உழைப்பு தான் இன்று மிகப்பெரிய சிம்மாசனத்தை அவருக்கு பெற்று தருகிறது. எவ்வளவு புகழ் வந்தாலும், மிகவும் எளிமையாக இருப்பவர். அவரின் வார்த்தை கூட பல முறை யோசித்தே பேசுவார்.
இதுவே அவர் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் எண்ணம். நாளைய தீர்ப்பில் தொடங்கிய அவர் பயணம் இன்று மெர்சல் வரை வந்திருக்கிறது. எல்லா சமூக பிரச்சனையிலும் தன் நிலையை சிலமுறை மௌனமாகவும், பல முறை வார்த்தையாலும் வெளிப்படுத்துபவர்.
இந்நிலையில், விஜயின் 44வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ந் தேதி வருகிறது. எப்போதும் போல இந்த வருடமும் தடபுடலாக கொண்டாட நினைத்து இருந்த, ரசிகர்களுக்கு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இல்லை என வந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதுவுமே விளம்பரப்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால், ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
இதேப்போல், விஜயின் இன்னொரு கோட்டையாக கருதப்படும் கேரளாவில் உள்ள ரசிகர்கள் பிறந்தநாளை கொண்டாட புது ஐடியாவை கையில் எடுத்துள்ளனர். அதன்படி, கேரளாவில் உள்ள 30 நகரங்களில் விஜயின் வெற்றி படங்களை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். கில்லி, போக்கிரி, தெறி, துப்பாக்கி, திருமலை, சச்சின், கத்தி, சிவகாசி, வேலாயுதம், மெர்சல் போன்ற படங்கள் திரையிடப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
