மெர்சல் திரைப்படம் மிக பிரமாண்டமான வெற்றியை அடைந்ததையடுத்து படக்குழுவினரை தனது வீட்டிற்கு அழைத்து நடிகர் விஜய் விருந்தளித்துள்ளார்.

சர்ச்சை மற்றும் வரவேற்பு என இரட்டை குதிரையில் சவாரி செய்தது விஜய் நடித்த மெர்சல் திரைப்படம். பாஜகவினர் அதனை கடுமையாக தாக்க அதனையடுத்து காங் துணை தலைவர் ராகுல் காந்தி அதனை பலமாக ஆதரித்தார். தமிழர்களின் கலை வெளிப்பாட்டில் தலையிடக்கூடாது என்று கூறியிருந்தார்.

mersal

அதனை தொடர்ந்து விஜய் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினருக்கு விருந்தளித்துள்ளார்.

அதில் ஏ.ஆர்.ரஹ்மான், அட்லி, எஸ்.ஜே.சூர்யா, பாடலாசிரியர் விவேக் என பலர் கலந்து கொண்டுள்ளனர். அதற்கான ஒரே ஒரு புகைப்படம் மட்டும் சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியாகி உள்ளது. புகைப்படம் வந்த வேகத்தில் #MersalSuccessParty ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட்டில் இடம் பிடித்தது.

இந்நிலையில், தமிழக தலைநகரம் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் விஜய்க்கு இந்த பார்ட்டி கொண்டாட்டம் தேவை தானா என்ற கேள்வியை ரசிகர்கள் சமூக வளைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆழப்போறான் தமிழன் என்று பாடலை பாடிவிட்டு தமிழன் பாதிப்பில் இருக்கும் போது தன்னுடைய படத்தின் வெற்றியை கொண்டாடுவது தான் விஜயின் தமிழ்ப்பாசமா என்று நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

அதே சமயம், தமிழ்நாடு சார்ந்த பல பிரச்னைகளுக்கு குரல் கொடுத்தவர் நடிகர் விஜய் என்பதை மறுக்க முடியுமா? என்று விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

vijay mersal

பிரபல இயக்குனரின் மகன் என்றாலும் தன்னுடைய ஆரம்பகட்ட சினிமா பயணத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர் நடிகர் விஜய். இவர் எல்லாம் நடிகரா என்று எல்லாம் நிறைய பத்திரிக்கையில் எழுதியிருந்தனர்.

ஆனால் அதையெல்லாம் தன்னுடைய கடின உழைப்பால் தற்போது தமிழ் சினிமாவிலேயே முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் சினிமாவில் நடிப்பதை தாண்டி மக்களுக்கு உதவுவதிலும் ரசிகர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்துள்ளார்.

1996-ம் ஆண்டு புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விஜய் பணம் கொடுப்பது, அரிசி, உடைகள் கொடுப்பது என தனது இளமை காலத்தில் இருந்தே செய்துள்ளார். இவரை பார்த்து ரசிகர்கள் பலரும் மற்றவர்களுக்கு உதவ முன்வந்திருக்கின்றனர்.

vijay

நடிகர்கள் பலர் தங்களது ரசிகர்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை, ஆனால் விஜய் ரசிகர்களை மக்களுக்கு உதவ எப்போது சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

vijay

மக்கள் மழையால் அவதிப்படும் போது மெர்சல் படத்தின் வெற்றி கொண்டாட்டம் முக்கியமா..? என கேட்பவர்களுக்கு விஜயின் இந்த செயலுக்கு பராட்டு தெரிவிக்கும் மனமுண்டா என விஜய் ரசிகர்கள் சமூக வளைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.