Connect with us

Cinemapettai

சிவகார்த்திகேயன் கதையில் தளபதி விஜய்.. இது என்னடா புது புரளியா இருக்கு!

sivakarthikeyan-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் கதையில் தளபதி விஜய்.. இது என்னடா புது புரளியா இருக்கு!

விஜய் விஷயத்தில் அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப கிடைக்கும் எனக் விஜய் பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருந்த இயக்குனர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

மீண்டும் நான்காவது முறையாக முருகதாஸ் உடன் இணைந்து படம் நடிக்க இருந்த விஜய் அந்த படத்தை கைவிட்டுவிட்டார்.

தற்போது அடுத்ததாக விஜய் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக தளபதி 65 படத்திற்கு இயக்குனர்களை தேடிக்கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் தற்போது அனிருத் சிபாரிசு செய்ததில் நெல்சன் திலீப் குமார் என்பவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

இவர் ஏற்கனவே நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்காக இன்னொரு கதை ரெடி செய்து வைத்திருந்த நிலையில் அதை தளபதி விஜய்க்கு கூறி ஓகே செய்து விட்டாராம் நெல்சன்.

நீண்ட நாட்களுக்கு பிறகு முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தில் நடிக்க உள்ளாராம் தளபதி விஜய்.

sivakarthikeyan-cinemapettai

sivakarthikeyan-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top