Tamil Cinema News | சினிமா செய்திகள்
ட்விட்டரை மிரளவைத்த தளபதி விஜய்.. பல அவமானங்களில் சாதனை..
ட்விட்டரை மிரளவைத்த தளபதி விஜய்
தளபதி விஜய் என்றாலே நம்ம ஞாபகத்துக்கு வருது அவருடைய சிரிப்பு, மேடையில அவர் பேசுற குட்டிக்கதை, அவரோட அழகான டான்ஸ், பைட் என்று சொல்லிக்கொண்டே போகலாம். தனது வயசு கூடக்கூட அழகு இன்னும் மெருகேறி கொண்டு வருகிறது. சிறு வயதில் தனது அப்பாவின் படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து இப்போது இவ்வளவு பெரிய நடிகன் ஆனதற்கு முக்கிய காரணம் அவரின் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தனது சினிமா வாழ்வின் தொடக்கத்தில் ஏற்பட்ட தவறான விமர்சனங்களும் ஆகும்.

thalapathy-vijay1
அவர் ஏதாவது சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் ரசிகர்கள் ஆர்வம் மிகுந்து எதிர்பார்த்துக் கொண்டிருப்பது அந்த குட்டி கதைக்காக. அது மட்டுமல்லாமல் தான் நிறைய இடத்தில் அவமானப்பட்டு இருப்பதாகவும் வெளிப்படையாக அவர் கூறியுள்ளார். இதனால் நான் சோர்ந்து போவதில்லை அதுவே என் வெற்றிக்கான படிக்கற்களாக மாற்றி கொள்வேன் என்று கூறியுள்ளார்.
தளபதி விஜய் சினிமா துறைக்கு வந்து 26 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த சாதனையை உலகத்திற்கு தெரிவிக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் ‘#26YrsOfThalapathyVIJAY’ ஹாஸ் டேக் மூலமாக ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் 2018 அதிகமாக பேசப்பட்ட படங்களில் ட்விட்டரில் சர்கார் என்று ஒரு கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் ரசிகர்கள் செய்த சாதனை என்றே கூறலாம்.
இது மட்டுமல்லாமல் உலக அளவில் பேசப்பட்ட பிரபலங்களில் லிஸ்டில் தளபதி விஜய் எட்டாவது மற்றும் 26வது இடத்தை பிடித்துள்ளார் இதில் முதலிடத்தை பிரதமர் மோடி அவர்கள் கைப்பற்றியுள்ளார்.ஒரு கல் சிலை ஆவது போல இளையதளபதி விஜய்க்கு ஏற்பட்ட ஒவ்வொரு அவமானங்களும் அவரை இப்போது தலைநிமிர்ந்த ஒரு தலைவனாக ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டனர்.
இவர் இப்போது நடிக்கும் அனைத்து படங்களிலும் அரசியல் சார்ந்ததாகவும் மக்களின் அன்றாட பிரச்சினைகளை கையில் எடுப்பதால் பல அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சுகின்றனர்.தளபதி விஜய்யின் அடுத்த படம் இயக்குனர் அட்லி உடன் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
