Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவர் தானா.? செம்ம கடுப்பில் ரசிகர்கள்
மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்யின் புதிய படத்தை இயக்கப் போவது இவரா அவரா என்று பலவாறு விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
தளபதி விஜய் நயன்தாராவுடன் நடித்த பிகில் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இப்படத்தை அட்லீ இயக்கி இருந்தார். விஜய்யின் அடுத்த படத்தை கைது படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கி வருகிறார் இப்படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதில் அவர் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். சேவியர் ப்ரிட்டோவின் எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை, அட்லீயே மீண்டும் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அட்லீ, விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி இருக்கிறார். இந்த மூன்று படங்களுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது என்பதால், அவரே மீண்டும் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
