கொடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ரஜினி பட வில்லன்.. கோமா நிலைக்கு சென்ற பரிதாபம்

தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் குணச்சித்திரம் மற்றும் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் அம்ரிஷ் புரி. இவருடைய அருமையான குரல் வளம் மற்றும் மிரட்டலான நடிப்பின் காரணமாக இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத வில்லனாக உருவெடுத்தார்.

இவர் இந்திய அளவில் இதுவரை 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தளபதி மற்றும் பாபா திரைப்படத்தில் வில்லனாக அவர் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களை தவிர தமிழில் வேறு படங்களில் இவர் நடிக்கவில்லை.

ஆனால் இந்த இரண்டு படங்களிலும்  இவருடைய நடிப்பு பிரபலமாக பேசப்பட்டது. மேலும் இவரை நடிகர் எம் ஆர் ராதாவின் மறுபிறவி என்று கூறுமளவிற்கு அருமையான நடிப்பை கொடுத்திருந்தார்.

அனைத்து மொழிகளிலும் பல்வேறு விருதுகளை பெற்ற இவர் 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மைலோடிஸ் பிளாஸ்டிக் சிண்ட்ரோம் என்ற அரிய வகை புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவருடைய உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இறுதியாக அவர் கோமா நிலைக்கு சென்று 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மரணமடைந்தார்.

அவருடைய இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்கள் இரங்கல்களை நேரில் வந்து தெரிவித்தனர். மேலும் அவருடைய சுயசரிதை புத்தகம் த ஆக்ட் ஆஃப் லைஃப் என்ற பெயரில் 2006 இல் வெளியிடப்பட்டது.

2019 ஜூன் 22 அன்று அவருடைய 87வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் கூகுள் அவரது படத்தை தனது டூடுலில் வெளியிட்டு கௌரவித்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்