புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கில்லி சாதனையை முறியடிக்க வரும் மற்ற ஒரு ரீ-ரிலீஸ் படம்.. தலைவரு வெறித்தனம்!

தமிழ் சினிமாவில் 5 தலைமுறை ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது ரஜினியின் படங்கள் வெளியாகி தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம்‌ முழுவதும் ரூ.600 கோடி வரை வசூலித்தது.‌

வேட்டையன் படம் அதைவிட பல மடங்கு வசூல் செய்யும் என்று எதிர்பார்த்த நேரத்தில், லைக்காவின் விளம்பரம் சரி இல்லாத காரணத்தினாலும், மேலும் ஒரு சில தளபதி ரசிகர்கள் படத்தை பற்றி பரப்பிய நெகட்டிவ் விமர்சனங்களால், படம் போட்ட பணத்தை மட்டும் தான் எடுத்தது. இருப்பினும் விநியோகஸ்தர்களுக்கு லாபமான படமாகவே வேட்டையன் அமைந்துள்ளது.

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்

ரஜினி, மம்முட்டி இணைந்து நடித்த தளபதி படம் இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் இன்று வரையிலும் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளவை. படம் வெளியாகி 33 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இருப்பினும் இன்றளவும் படம் ktv-யில் போடும்போது, குடும்பமே அமர்ந்து பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா துறைக்குள் வந்து 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. மேலும் டிசம்பர் 12 சூப்பர்ஸ்டார் பிறந்தநாளும் வருகிறது. அதனால் ரசிகர்களை குதூகலப்படுத்த தளபதி படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. படையப்பா படம் தான் வரும் என்று எதிர்பார்த்த நேரத்தில் தளபதி படம் வெளியாக உள்ளது.

எஸ்எஸ்ஐ புரொடக்சன்ஸ் நிறுவனம் தளபதி படத்தை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ரீ ரிலீஸ் செய்கிறது. அதுமட்டுமின்றி, ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று அவர் நடிப்பில் அடுத்து வரவுள்ள ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பும் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த சூழலில், தளபதி விஜயின் கில்லி படம் ரீ-ரிலீசாகி செய்த வசூலை தளபதி படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் உளளது.

- Advertisement -

Trending News