விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்திலிருந்து வரும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களை கொண்டாட வைக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பிசினஸ் கோடிக்கணக்கில் கல்லா கட்டியதை அடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.
வரும் பொங்கலுக்கு துணிவுடன் மோத இருக்கும் இந்த திரைப்படம் வேற லெவல் சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். இந்நிலையில் இதுவரை படத்தை விளம்பரம் செய்து அசத்தியதில் ரஜினியின் கபாலி படம் தான் முதன்மை வகிக்கிறது.
Also Read: 300 கோடியை தாண்டி வசூல் செய்த 6 படங்கள்.. ஆறே நாட்களில் சாதனையை முறியடித்த பொன்னின் செல்வன்
வெளிநாடு பறக்கும் விமானங்கலிலேயே கபாலி உருவபொம்மையை அச்சடித்து அசத்தி விட்டனர். இதனாலையே இந்த படத்தின் கதை சுமாராக இருந்தாலும் அதில் சூப்பர் ஸ்டார் நடித்த காரணத்தினாலும், அந்த படத்திற்கு படக்குழு செய்த விளம்பரத்தால் அளவில் வசூலை வாரி குவித்தது.
மேலும் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, தன்ஷிகா, ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான கபாலி திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் வசூல் மட்டும் 625 கோடி முதல் 650 கோடி வரை வசூல் வேட்டையாடியது குறிப்பிடத்தக்கது.
Also Read: பயங்கர ஸ்பீடில் இருக்கும் வாரிசு.. மேனேஜரை வண்டை வண்டையாக கிழிக்கும் ரசிகர்கள்
இப்படி விளம்பரம் செய்து அசத்திய கபாலி படத்தை மிஞ்சும் அளவிற்கு இருக்கிறது வாரிசு படம். ஏனென்றால் வாரிசு டீம் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக 4 ரயில், 400 பேருந்துகள் என குத்தகைக்கு எடுத்துள்ளது. மிக நீண்ட பயணம் செல்லும் இரண்டு ரயில்களில் முழுவதுமாக வாரிசு விளம்பரப் படங்கள் தான்.
அதேபோல் நம்ம ஊரு பேருந்துகளிலும் வாரிசு பட விளம்பரங்கள்தான். இன்னும் பறக்கும் பிளைட் கம்பெனியிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் அதுவும் ரெடியாகிவிடும். மேலும் ரிலீசுக்கு முன்பே ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் வம்சி பைடிபைலி.
Also Read: கபாலி பிளாப்ன்னு யாரு சொன்னது? 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா, அவிழ்த்து விட்ட தயாரிப்பாளர்