Tamil Cinema News | சினிமா செய்திகள்
“இளையதளபதி” ஏன் “தளபதியாக” மாறியது.! இதோ விஜய்யே சொன்ன பதில்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் மெர்சல் இந்த திரைப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருப்பார், கடந்த வருடம் வெளியாகிய மெர்சல் திரைப்படம் பல சாதனைகளை படைத்தது, இந்த படத்தின் மூலம் இளைய தளபதி விஜய், என்பதை தளபதி விஜய் மாற்றினார்.

vijay sarkar
இந்த மாற்றம் ஏன் என பலரும் கேள்வி கேட்டார்கள் இதைப்பற்றி விஜயின் நண்பரான சஞ்சீவ் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார், அவர் கூறியதாவது மெர்சல் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நாம்தான் தொகுத்து வழங்கி இருந்தேன் அப்பொழுது மேடை ஏறுவதற்கு முன்பு விஜய் போனில் அழைத்து இளையதளபதி விஜய், தளபதியாக மாறியதன் காரணம் என்ன என கேட்க வா என கேட்டேன்.
அதற்கு விஜய் காரணம் எதுவுமில்லை மெர்சல் படத்தில் என்னை தளபதி என்று அழைப்பார்கள் அதனால் அப்படியே வைக்கப்பட்டது, இதற்கு எதுவும் பெரிய காரணம் எதுவும் கிடையாது, இவ்வாறு தெரிவித்ததாகக் கூறினார் மேலும் இளைய தளபதி கூட மக்கள் கொடுத்தது தான் அது போல் தான் இதுவும், நாளைக்கே இளைய தளபதியும் இல்லை தளபதியும் இல்லை என்று ஆனால் கூட அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் அவர் எப்பொழுதும் அவர் வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் எனக் கூறினார்.
