Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் வைத்திருந்த தல படத்தின் ரிங்டோன்.. பிரபல நடிகர் கூறிய சீக்ரெட்
தல தளபதி என்றாலே இணையதளத்தில் இன்றளவும் ரசிகர்கள் அடித்துக்கொள்ள தான் செய்கின்றனர். ஏனென்றால் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுப்பதில்லை.
ஆனால் உண்மையான வாழ்க்கையில் தல தளபதி அப்படி இல்லையாம். அதாவது காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் யோகிபாபு தல தளபதி படங்களில் ஒரே நேரங்களில் நடித்தபோது பேட்டி அளித்திருந்தார்.
அப்போது அவர் கூறுகையில் தல படத்தை முடித்துவிட்டு தளபதியிடம் போகும்போது அஜித் எப்படி இருக்கிறார் என்று முதல் வார்த்தையாக கேட்பாராம். இதேபோல்தான் தளபதியும் கேட்டு தெரிந்து கொள்வாராம்.
விஜய்யுடன் பல படங்களில் நண்பராக நடித்து காமெடியில் கலக்கிய தாமு ஒரு சீக்ரெட் ரிங்டோன் விஷயத்தை கூறியுள்ளார். அதாவது தல நடிப்பில் வெளிவந்த மெகா ஹிட்டான பில்லா படத்தின் தீம் மியூசிக்கை தளபதி ரிங்டோனாக வைத்திருந்தாராம். அதைக்கேட்டு தாமு ஷாக்காகி விட்டாராம்.
இன்றளவும் போட்டி பொறாமைகள் இல்லாமல் தல தளபதி இருப்பதைப் போன்று ரசிகர்களும் இருப்பதற்கு ஆசைப்படுகிறார்கள். ஆனால் அது சாத்தியமே இல்லை ஏனென்றால் டிசைன்ல அப்படி இருக்கு. ஆனா பொதுவா ஒரு பிரச்சனை வந்தா ரெண்டு பேரும் சேர்ந்திடு வாங்க, தடம் படத்தில் சேரும் இரட்டை வேடமிட்ட அருண் விஜய் போல..
