Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி விஜய்யை அங்கிள்ன்னு கூப்பிட்ட நடிகை! செம காண்டான தளபதி ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய ரசிகர் கூட்டத்தையும், ரசிகர்கள் அவர் மீது வைத்துள்ள அன்பையும் பற்றி விளக்கிக் கூறவே முடியாது.
அந்த அளவிற்கு விஜய் வெறியர்கள் சுற்றி திரியும் இந்த தமிழகத்தில் ஒரு சீரியல் நடிகை தளபதியை அங்கிள்ன்னு கூப்பிட்டு இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் தளபதியின் பழைய புகைப்படம் ஒன்று வெளியானது. இதில் விஜய்யின் கையில் ஒரு பெண் குழந்தை இருந்தது.
அந்தப் பெண் குழந்தை யார் என்றால் அவர் தான் ‘இதயத்தை திருடாதே’ சீரியல் நடிகை ஹீமா பிந்து. இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
அண்மையில் ஒரு இன்டர்வியூ கொடுக்கும்போது இப்புகைப்படத்தை பற்றி பேசியுள்ளார் ஹீமா பிந்து. அதில் அவர் “சின்ன வயசுல விஜய அங்கிள்ன்னு தான் கூப்பிட்டேன், இப்போதும் அவர் எனக்கு அங்கிள் தான்” என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்ட விஜய் ரசிகர்கள் என்னது தளபதியை பார்த்து அங்கிள்ன்னு கூப்பிடுறீங்க, அவருக்கு என்ன அவ்வளவு வயசா ஆயிடுச்சுன்னு கேக்குறாங்க.

vijay-hima-bindu-1
இதனால் கொல காண்டான தளபதி ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். என்னதான் தளபதிக்கு ரியலா 46 வயசு ஆனாலும் அவர் ரசிகர்கள் மத்தியில் என்றும் 25 தான்!
