Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதியின் தங்கங்கள்.. நெகிழ வைக்கும் சம்பவம்
தளபதி விஜய்யின் ரசிகர்கள் படங்களை கொண்டாடுவதோடு நிறுத்திவிடாமல் பொதுமக்களுக்கும் தங்களால் இயன்ற உதவியை செய்வதில் வல்லவர்களாகவும் உள்ளனர்.
விஜய் ரசிகர்கள் மக்கள் மன்றம் சார்பில் விலையில்லா உணவகம் ஒன்றை மதுரையில் நிறுவி தற்போது வரை நடத்தி வருகின்றனர். இதனால் பலரும் பயன் பெற்றுள்ளனர்.
இதேபோல் தஞ்சை மாவட்டத்திலும் விலையில்லா உணவகம் ஒன்றை நாளையிலிருந்து தொடங்க உள்ளனர். இதனால் பலரும் பயன் பெறுவார்கள் என்று அப்பகுதி தளபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சியாக கூறுகின்றனர்.
ரசிகர்களின் இச்செயலை கண்ட நடிகர் விஜய் நெகிழ்ச்சி அடைந்து உள்ளார். மேலும் இதுபோன்ற திட்டங்களை பாதியில் கைவிடாமல் இருக்கவும் மேலும் தானே பண உதவி செய்வதாகவும் கூறினார். ஆனால் அவரைப் போன்ற அவரது ரசிகர்களும் பிடிவாதமாக வேண்டாம் என்று கூறிவிட்டனர்.
நாலு பேருக்கு நல்லது செய்யணும் என்ற மனசு விஜய் ரசிகர்களுக்கு நிறையவே இருக்கு.
