fbpx
Connect with us

Cinemapettai

புரட்சித்தலைவர் விஜய்.. இணையத்தை அசரடிக்கும் தளபதி ரசிகர்கள்

Tamil Nadu | தமிழ் நாடு

புரட்சித்தலைவர் விஜய்.. இணையத்தை அசரடிக்கும் தளபதி ரசிகர்கள்

தளபதி விஜய் சமீபகாலமாக தன்னுடைய திரைப்படங்களில் அரசியல் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை வைத்தபடி காட்சிகள் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இதனால் தொடர்ந்து அரசியல்வாதிகளின் வில்லனாக பார்க்கப்படுகிறார் விஜய்.

இருந்தாலும் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே அவருடைய கருத்துக்கள் பெரும் வரவேற்பை பெறுவதால் தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் திடீரென தளபதி ரசிகர்கள் தளபதி விஜய்யை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டு இணையதளங்களில் பதிவிட்டு வந்தனர். ட்விட்டரில் நம்பர்-ஒன் ட்ரெண்டிங்கில் வந்து அசத்தியது #புரட்சிதலைவர்விஜய் என்ற பதிவு.

தளபதி விஜய் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அதன்படி வில்லு படத்தில் எம்ஜிஆர் சம்பந்தமாக ஒரு காட்சியும், மெர்சல் படத்தில் ஓபனிங் சீனில் எம்ஜிஆர் பாடலை ஒலிக்கவிட்டு அறிமுகமாவது, அதே போல் தியேட்டரில் எம்ஜிஆர் நடந்து வருகையில் விஜய் நடந்து வருவது என தொடர்ந்து எம்ஜிஆர் ரெஃபரன்ஸ் வைக்கப்பட்டு வருகிறது.

எம்ஜிஆரை மக்கள் எப்படி கொண்டாடினார்கள் அதேபோல் தளபதி விஜய்யை கொண்டாடுவதாக அதற்கேற்ற புகைப்படங்களை தேடி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அடுத்த எம்ஜிஆர் தளபதி விஜய் தான் எனவும் சமீபகாலமாக அவரது ரசிகர்கள் தொடர்ந்து பேசி வருவது மற்ற ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இது அரசியல் சம்பந்தப்பட்ட சர்ச்சைகளையும் விரைவில் ஏற்படுத்துவதற்கு தூண்டுகோலாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Continue Reading
To Top