Tamil Cinema News | சினிமா செய்திகள்
ட்ரெண்டாக ஆசைப்பட்டு அசிங்கப்பட்ட மீரா மிதுன்.. வச்சு செய்து பொங்கல் கொண்டாடிய விஜய், சூர்யா ரசிகர்கள்
பிரபல விஜய் டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் மூலம் அறிமுகமானவர் மீரா மிதுன். தற்போது பிக்பாஸ் இல்லாத குறையை வனிதாவும், மீராமிதுன் போட்டி போட்டு தாங்களாகவே அசிங்கப் படுத்தி கொள்கின்றனர்.
நடிகர்களை அவமானப்படுத்தினால் தாங்கள் பிரபலம் ஆகி விடலாம் என்று மீராமிதுன் செய்து வரும் கேவலமான ஒரு விஷயத்தை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
தான் ஒரு செலிபிரிட்டி என்றும் சூப்பர் மாடல் என்றும் பெருமைக்கு எதையோ தின்னுவது போல கூறி கொள்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு விஜய் மற்றும் சூர்யாவின் மனைவியைப் பற்றி அவதூறாகப் பேசி ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாகி உள்ளார்.
இதனால் கடுப்பான ரசிகர்கள் தற்போது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கையில் கிடைத்தால் சல்லடையாக பிரித்து விடுவோம் என்று ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இப்படி நாளுக்கு நாள் எதிர்ப்புக்களை சம்பாதித்து என்ன சாதிக்கப் போகிறார் மீராமிதுன் என்று தெரியவில்லை, சிம்பு போட்ட பாடலுக்கு குரல் கொடுத்த மகளிர் சங்கங்கள் தற்போது எங்கே போனது என்று தெரியவில்லை.
மீரா மிதுனை பேட்டி எடுப்பது கேவலம் என்று தயாரிப்பாளர் ரவீந்திரன் அண்மையில் விலகிவிட்டார், ஆனால் அதையும் பெருமையாக தன்னை பார்த்து பயந்து விட்டார் என்று கூறியுள்ளார் மீராமிதுன்.
ஒரு பெண் அசிங்கமா திட்டிய வீடியோ

meera-mithun-cinemapettai
