fbpx
Connect with us

Cinemapettai

விஜய்யை தேம்பித் தேம்பி அழ வைத்த பிரபல நடிகை.. வருத்தத்தில் தளபதி ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யை தேம்பித் தேம்பி அழ வைத்த பிரபல நடிகை.. வருத்தத்தில் தளபதி ரசிகர்கள்

தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ரசிகர்களின் தளபதியாக உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய்.

என்னதான் இவர் பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகனாக சினிமாவில் நுழைந்தாலும், இவருடைய கடின உழைப்பினாலே இன்று வரை முன்னணி கதாநாயகனாக இருக்க முடிகிறது.

2011 ஆம் ஆண்டு இவர் நடித்து வெளியான ‘வேலாயுதம்’ படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக நடித்த சரண்யா மோகன் தற்போது விஜய்யைப் பற்றிய சுவாரசியமான விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்தப் படத்தில சரண்யா மோகன் இறந்து போன பிறகு விஜய் அழுகிற காட்சி இருக்கும். இதில் விஜய் நிஜமாவே தேமி தேமி அழுதபடி ரொம்பவே எமோஷனலாக நடித்திருப்பார்.

ஏன்னா ரியல் வாழ்க்கையில, நடிகர் விஜய்யின் சொந்த தங்கச்சி வித்யா 2 வயசு இருக்கும் போது உடல்நிலை குறைவால் இறந்துவிட்டதால், வித்யாவின் ஞாபகம் இந்த சீன்ல வந்ததால் ரொம்பவே கவலைப்பட்டார். இதை நடிகை சரண்யா மோகன் கண்கலங்கியபடி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வேலாயுதம் படத்தை போலவே திருப்பாச்சி படத்திலும், தங்கச்சி பாசத்தை ரியலவே வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், தனது சொந்த தங்கச்சி உயிரோடு இருந்திருந்தா எப்படி இருக்கும்னு? தன்னோட ஏக்கத்தை வெளிப்படுத்தும் அளவுக்கு ரொம்பவே எமோஷனலா நடித்திருப்பார்.

Continue Reading
To Top