Connect with us

Cinemapettai

மறைமுகமாக நெருங்கிய நண்பரை வைத்து மிரட்டிய தளபதி விஜய்.. கலக்கத்தில் மீரா மிதுன்

vijay-sanjeev-cinemapettai-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மறைமுகமாக நெருங்கிய நண்பரை வைத்து மிரட்டிய தளபதி விஜய்.. கலக்கத்தில் மீரா மிதுன்

பிரபல சீரியல் நடிகர் மற்றும் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ், மீராமிதுன் செய்துவரும் சில்லரைத்தனமான விசியத்திற்கு மறைமுகமான பதிலளித்துள்ளார்.

அதாவது உச்சத்திலிருக்கும் பிரபலத்தை அவமானப்படுத்தினால் தான் பிரபலமாகி விடலாம், என்று தனக்குத்தானே தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட மீராமிதுன் கேவலமான சில விஷயங்களை செய்து வருகிறார்.

இதற்காக தளபதி மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் இடையே பெரும் கோபத்திற்கு ஆளாகி உள்ளார். நேற்று நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீராமிதுன் தான் பெரியாரை போல் தமிழ் மக்களுக்கு தொண்டாற்றி சேவை செய்யப் போகிறேன் என்று தெரிவித்த காமெடியை கேட்டு ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

சஞ்சீவ் மற்றும் தளபதி லயோலா காலேஜில் படிக்கும் போதே நண்பர்கள், 2017 நடைபெற்ற மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழாவை சஞ்சீவ் தொகுப்பாளராக எடுத்து நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சன் டிவியின் பிரபல கண்மணி சீரியலில் நடித்து வருகிறார் என்னதான் நண்பராக இருந்தாலும் தற்போது வரை பட வாய்ப்பு என்று தளபதியிடம் கேட்டதே இல்லையாம்.

இப்படி ரசிகர்கள் கொந்தளித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு புறம் தளபதியின் நண்பனும் தீவிர ரசிகரான சஞ்சீவ் ‘இக்நோர் நெகட்டிவிட்டி’ என்று தளபதி பாணியில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதை பார்க்கும்போது தளபதியே ரிப்ளை பண்ணது போல ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

vijay-sanjeev-cinemapettai

vijay-sanjeev-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top