Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ரத்து.. வருத்தத்தில் தளபதியன்ஸ்

Thalapathy Vijay

ஜூன் மாத இறுதியில் கொண்டாடப்பட்ட இருந்த விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் விஜய். தனது ரசிகர்களால் இளையதளபதி என்று அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் ஜோசப் விஜய்.பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் மகன் ஆவார். “நாளைய தீர்ப்பு” என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஜூன் 22ந் தேதி 1974ம் ஆண்டு எழும்பூர் மருத்துவமனையில் பிறந்தவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நாளை வருடா வருடம் அவரின் ரசிகர்கள் தமிழகமெங்கும் இனிப்புகள், வாணவேடிக்கை, ரத்த தானம் என பல இடங்களிலும் போட்டா போட்டுக் கொண்டு சிறப்பித்து விடுவார். ஆனால், இதற்கெல்லாம் விஜயிடன் இருந்து கிடைக்கும் ஒரே பதில் அவரின் சிரிப்பு மட்டும் தான். இதற்காகவே எல்லா வருடமும் இந்த நிகழ்வுகள் நடக்கும்.

இதை தொடர்ந்து, வரும் 22ந் தேதி விஜய் தனது 47வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதற்காக அவர் ரசிகர்கள் பல ஏற்பாடுகளை தற்போதில் இருந்து தொடங்கி விட்டனர். ஆனால், விஜயின் தலைமை ரசிகர் மன்றத்தில் இருந்து கிளை மன்றங்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனால் தளபதி ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த வருடம் ஆடம்பர கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம். அமைதியான வழியில் கொண்டாடுங்கள். ஏழை மக்களுக்கு உதவிகளை செய்யுங்கள். அதையும் கூட விளம்பரப்படுத்தக் கூடாது என்பது தான் அந்த அறிவிப்பு.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் 62வது படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள விஜய் விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அதனால், பிறந்தநாளன்றும் அவர் ஊரில் இல்லை. எனவே அவரை பார்க்க யாரும் சென்னை வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடீரென விஜய் தரப்பில் வெளியாகி இருக்கும் இந்த அறிவிப்பு, மக்களை கருதியே எனக் கூறப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. நீட் தற்கொலைகள், தூத்துக்குடி சம்பவத்தில் 13 பேர் பலியாகிது, காவிரி பிரச்சனை என இன்னும் பலவை தீர்வு காணாமல் இருக்கிறது. இந்த நேரத்தில் பிறந்தநாளை கொண்டாடுவது சரியாக இருக்காது என விஜய் கருதுகிறார்.

சமீபத்தில், தூத்துக்குடி சம்பவத்தில் உயிர் விட்டவர்களின் குடும்பங்களை நள்ளிரவில் நேரில் சந்தித்து எந்தவித ஆரவாரமும் இன்றி ஆறுதல் கூறியவர் தளபதி. இது பல தரப்பிலும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top