Tamil Cinema News | சினிமா செய்திகள்
வருகிறது விஜய் பிறந்தநாள்.. இந்தா கிளம்பிட்டாங்களே!

தளபதி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ரசிகர்கள் அடித்திருக்கும் போஸ்டர்கள் சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கோலிவுட்டில் அதிகமான ரசிகர்களை வைத்து இருப்பவர் விஜய். ஆனால், ரசிகர்கள் இவரை தளபதி என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகனான இவர் “நாளைய தீர்ப்பு” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது கோலிவுட்டில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்து இருக்கிறார்.
இவரின் பிறந்தநாளான ஜூன் 22ந் தேதியை ரசிகர்கள் வருடா வருடம் தமிழகமெங்கும் இனிப்புகள், வாணவேடிக்கை, ரத்த தானம் என போட்டி போட்டுக்கொண்டு கொண்டாடி தீர்ப்பர். எல்லா வருடம் போல இந்த வருடமும் அந்த கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் தடபுடலாக தொடங்கியது.
ஆனால், இந்த மாத முதல் வாரத்திலேயே விஜய் தனது ரசிகர் மன்றம் மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடக்கூடாது. எது செய்தாலும் அது பொது வெளிக்கு வரக்கூடாது. மேலும், தேவையில்லாத ஆடம்பரத்துக்கு செய்யும் செலவை தேவையானவர்களுக்கு உதவும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதனால், விஜய் ரசிகர்கள் செம அப்செட் மூடுக்கு சென்றனர்.

vijay
இந்நிலையில், விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ரசிகர்கள் அடித்திருக்கும் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் அடித்து வருகிறது. அப்போஸ்டரில், தத்தளிக்கும் தமிழ்நாடே இனி தளபதியை நாடு எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. கமல் மற்றும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கும் இவ்வேளையில் இந்த போஸ்டர்கள் விஜயும் அரசியலுக்கு வர இருக்கிறாரோ என்ற கேள்வியை உருவாக்கி இருக்கிறது.
ஆனால், கண்டிப்பாக விஜய் இதை விரும்ப மாட்டார் என அவரின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
