Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் ரசிகர்களையும் பெருமைப்பட வைத்த விஜய்.. வேற லெவல் தளபதி நீங்க
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அதனை தாங்கி நிற்கும் இரு தூண்களாக இருப்பவர்கள்தான் தளபதி விஜய் மற்றும் தல அஜித். கோடான கோடி ரசிகர்கள் ஆதரவில் அவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் திருவிழாவைப் போல் காட்சியளிக்கும்.
அது என்னமோ தெரியவில்லை சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்து சினிமா மட்டுமல்லாமல் எந்த துறையாக இருந்தாலும் இரண்டு பேர்களுக்கிடையே போட்டிகள் இல்லை என்றால் அதில் சுவாரசியம் இல்லை என்பது மக்கள் கணிப்பாக உள்ளது.
அப்படித்தான் தற்போது தமிழ் சினிமாவை பொருத்தவரை வசூல் ரீதியாக இருவரில் யார் பெரியவர்கள் என்பது ரசிகர்களால் போட்டியாக பார்க்கப்படுகிறது. படத்தின் வசூலையும் தாண்டி ஒரு சில ரசிகர்கள் மிகப்பெரிய நடிகர்கள் என்று கூட பார்க்காமல் அசிங்கமாகவும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை காணவும் முடிகிறது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் தல அஜித்தை பற்றி பேசியதை விஜய் ரசிகர்களை மட்டுமின்றி அஜித் ரசிகர்களையும் பெருமைப்பட வைத்துள்ளது.
விஜய்யிடம் தொகுப்பாளர், ஏன் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு கோட் சூட் போட்டு வந்தீங்க என கேட்டதற்கு, விஜய், நண்பர் அஜித் மாதிரி டிரஸ் பண்ணலாம்னு போட்டு வந்தேன் எனக் கூறியது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
அதற்கு காரணமாக இருந்தது மாஸ்டர் பாடல் லிஸ்டில் தருதல கதறுணா என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. அதை தல அஜித்தை தாக்குவதற்காக தான் வைத்துள்ளார்கள் என நினைத்து காலையில் இருந்து அந்த வார்த்தையை ட்ரண்ட் செய்து வந்தனர்.
ஆனால் மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியான பிறகு இந்த பாட்டையா தப்பா பேசுணோம் என தல ரசிகர்களை சங்கடத்தில் ஆழ்த்தியது போல இருந்தது. இதனால் தற்போது டுவிட்டரில் நண்பர் அஜித் என்ற வார்த்தை டிரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
