புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

வியாபாரத்தில் சாதனை படைக்கும் தளபதி 69.. TN தியேட்டர் உரிமம் மட்டும் இத்தனை கோடியா.!

Thalapathy 69: விஜய் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி விட்டார். சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வேற லெவலில் கவனம் பெற்றது. அதை அடுத்து அவருடைய அடுத்த கட்ட நடவடிக்கையை மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மக்கள் பணிக்காக நடிப்பை விட்டு விலகும் அவர் தளபதி 69 படத்தோடு சினிமாவுக்கு குட் பை சொல்ல இருக்கிறார். அதனாலயே அவருடைய கடைசி படத்துக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கிறது. நீ நான் என போட்டி போட்டு படத்தை வாங்க குவிக்கின்றனர்.

இதன் ஓவர் சீஸ் பிசினஸ் 78 கோடியாக இருக்கிறது. அதேபோல் தமிழக தியேட்டர் உரிமையை பெறுவதற்கும் முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. அதில் தயாரிப்பாளர் லலித் 100 கோடி வரை கொடுக்க தயாராக இருக்கிறாராம்.

வியாபார சாதனை செய்யும் விஜய்

இதுதான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி தளபதி 69 தமிழக தியேட்டர் உரிமை லலித்துக்கு கிடைக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இவர் விஜய்க்கு ரொம்பவும் நெருக்கமானவர்.

அது மட்டும் இன்றி விஜய் தன் சொந்த காசை போட்டு உரிமையை வாங்கி லலித் மூலமாக வியாபாரம் செய்வதாக கூட ஒரு பேச்சு இருக்கிறது. அதனால் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் லலித் இந்த வாய்ப்பை தட்டி தூக்கி இருக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் அதிகபட்ச தொகை கொடுத்து உரிமையை வாங்குவதற்கும் காரணம் இருக்கிறது. ஏனென்றால் விஜய்யின் படம் சாதாரணமாகவே வசூலில் கலக்கும். அதுவும் கடைசி படம் என்பதால் நிச்சயம் வசூல் சாதனை செய்யும். அதனாலேயே லலித் இப்போது முந்திக் கொண்டுள்ளார்.

- Advertisement -

Trending News