தளபதி-68, அந்த படத்தின் அப்பட்டமான காப்பி.. மறைக்க வெங்கட் பிரபு செய்யும் நாசுக்கான வேலை

Thalapathy-68 is a copy of that movie: விஜய் ஆட்ட நாயகனாகவும், வசூல் மன்னனாகவும் அடுத்தடுத்த படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்தாண்டு வெளிவந்த லியோ மற்றும் வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் அளவில் லாபத்தை பார்த்து இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் அவருடைய 68வது படத்தை நடித்துக் கொண்டு வருகிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி கமிட்டாகி இருக்கிறார். அத்துடன் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், சினேகா, லைலா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் விஜய் இளமையாக காட்ட வேண்டும் என்பதற்காக நவீன தொழில்நுட்ப உதவியுடன் பிரம்மாண்ட முறையில் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் புத்தாண்டு நாளை ஒட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது. இதில் விஜய், அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

Also read: விஜய்யை சாவு கூட்டத்தில் அசிங்கப்படுத்தியதால் நடக்கப் போகும் விபரீதம்.. ஏற்கனவே நடந்த போர்க்களம்

மேலும் இப்படம் முழுக்க முழுக்க டைம் டிராவல் கதையை மையமாக வைத்து இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து தற்போது வெளிவந்த தகவலின் படி GOAT படம் “ஜெர்மன் மேன்” என்ற படத்தின் காபி கதையாக தான் இருக்கிறதாம். அதேபோல இன்னும் இரண்டு படங்களை ரெஃபரன்ஸ் செய்து அதை கொஞ்சம் பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்து ஒரு கோர்வையாக வெங்கட் பிரபு எடுத்துக்கொண்டு வருகிறார்.

அதுவும் எதற்காக என்றால் ஒரே படத்தின் கதையை காப்பி அடித்தால் இது காபி கேட் என்று சொல்லிவிடுவார்கள் என்பதால் வெங்கட் பிரபு நாசுக்காக சில வேலைகளை செய்கிறார். அதற்காக இரண்டு மூன்று படங்களை கொஞ்சம் கொஞ்சமாக காப்பி அடித்து தளபதி 68 படத்தை உருவாக்கி வருகிறார். ஆனாலும் காப்பி கதையாக இருந்தாலும் மக்களுக்கு பிடித்து இருந்தால் கண்டிப்பாக வரவேற்பார்கள்.

அதற்கு உதாரணமாக இயக்குனர் அட்லீயை சொல்லலாம். ஏன் என்றால் இவர் எடுக்கும் படம் அனைத்துமே காபி கதையாக தான் இருக்கும். இருந்தாலும் மக்களுக்கு எப்படி கொடுத்தால் பிடிக்கும் என்ற யுக்தியே தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி கதையை வடிவமைத்து ஹிட் ஆக்கி விடுவார். அதேபோல வெங்கட் பிரபுவும் இந்த யுக்தியை பாலோ பண்ணினால் கண்டிப்பாக வெற்றி அடைய வாய்ப்பு இருக்கிறது.

Also read: விஜய்யை முதலமைச்சராக்க திட்டம் தீட்டிய விஜயகாந்த்.. சுக்கு நூறாக நொறுக்கிய பிரேமலதா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்