Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-lokesh

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பணம் சம்பாதிக்க குறுக்கு புத்தியில் யோசிக்கும் விஜய்.. தளபதி 67 மொத்த லாபத்தின் ஷேர் இதுதான்

பணம் சம்பாதிப்பதற்காக விஜய் குறுக்கு வழியில் மாஸ்டர் பிளான் போட்டு கோடிக்கணக்கில் லாபம் பார்த்து வருகிறார்.

தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு அமோகமாக ஆரம்பித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த படத்தை பற்றிய பேச்சும், எதிர்பார்ப்பும் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் தற்போது இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சோசியல் மீடியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படம் பற்றிய சில சர்ச்சையான செய்திகளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இப்படத்திற்காக விஜய் மறைமுகமாக சில வேலைகளை பார்த்து வருகிறாராம். எப்படி என்றால் அவர் தன்னுடைய சம்பளத்தில் 30 சதவீதத்தை வரி பணமாக செலுத்தி வருகிறார். அதனால் விஜய் தன்னுடைய பிஆர்ஓ-வை பினாமியாக உருவாக்கியுள்ளார்.

Also read: தளபதியை ஒதுக்கும் உலக நாயகன்.. குளறுபடி செய்ததால் கோபத்தின் உச்சகட்டத்தில் கமல்

அவர்களை எல்லாம் தான் நடிக்கும் படங்களில் கோ புரொடியூசராக வைத்து மறைமுகமாக தன் பணத்தை முதலீடு செய்து வருகிறார். அதன்படி இந்த தளபதி 67 திரைப்படத்திலும் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் இணை தயாரிப்பாளராக இருக்கிறார். இதற்கு முன்பு மாஸ்டர் திரைப்படத்திலும் அவர் மூன்று தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் விஜய்க்கும் எதிர்பார்க்காத அளவுக்கு லாபமும் கிடைத்து வருகிறதாம். அதிலும் இந்த தளபதி 67 திரைப்படம் இப்போதே பிசினஸில் கலக்கிக் கொண்டிருக்கிறது. மேலும் விஜய் மற்றும் லோகேஷ் இருவரின் கூட்டணியும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: அத்தனை பேரையும் ஒரே நாளில் ஜம்மு காஷ்மீரில் ஆஜர் படுத்தும் லோகேஷ்.. பட்டைய கிளப்பும் தளபதி 67

அதனாலேயே இப்படம் 750 கோடி அல்லது அதற்கும் மேலேயே வசூலிக்கும் என்ற ஒரு கணிப்பும் இப்போது இருக்கிறது. அதன் மூலம் விஜய்க்கு கிடைக்கும் பங்கு மட்டுமே 200 கோடிக்கு மேல் வரும். இப்படி இந்த படத்தினால் அவருக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல் அவர் தன் பினாமியின் மூலம் கீர்த்தி சுரேஷை வைத்தும் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார்.

இப்படி மறைமுகமாக ஒரு பிசினஸை நடத்தி வரும் விஜய் பற்றி தான் தற்போது ஒரே பேச்சாக இருக்கிறது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட இது போன்று சம்பாதிக்கவில்லை. ஆனால் விஜய் குறுக்கு வழியில் இப்படி பணம் சம்பாதித்து வருகிறார் என்ற ஒரு சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. இதை அவர் நேரடியாகவே செய்யலாமே என்ற கேள்வியும் திரையுலகில் இப்போது எழுந்து வருகிறது.

Also read: பினாமியை வைத்து சூப்பர் ஸ்டாரையே ஓரம் கட்டும் தந்திரம்.. விஜய் நடத்தும் அண்டர் கிரவுண்ட் பிசினஸ்

Continue Reading
To Top