சூட்டிங்கிற்கு முன்பே பல கோடிகளை அள்ளிய தளபதி 67.. இது தான் வியாபார தந்திரமா!!

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஷ்யாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பூ, யோகி பாபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா கிரிஷ், சம்யுக்தா சண்முகநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தளபதி விஜய் இந்த படத்திற்காக படுபிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் பல வெளியாகின. இந்நிலையில் வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் பலத்த பாதுகாப்புகளுக்கு நடுவே இருக்கிறது.

Also Read: ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட தளபதி.. இன்று பாக்ஸ் ஆபீஸ் கிங்

வாரிசு பட சூட்டிங்கிற்கு முன்பே விஜயின் அடுத்த படமான தளபதி 67 பற்றி பல தகவல்கள் வெளியாகின. தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லோகேஷ் ஏற்கனவே தளபதியுடன் மாஸ்டர் திரைப்படம் பண்ணினார். லோகேசின் ரீசன்ட் படமான விக்ரம் பயங்கர ஹிட் அடித்தது.

தளபதி விஜயின் மாஸ், லோகேஷ் மீதான சென்சேஷன் இந்த படத்திற்கான ஹைப்பை அதிகரித்து விட்டது என்று சொல்லலாம். இதனாலேயே இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே தளபதி 67 OTT நிறுவனத்தால் 120 கோடிக்கு வாங்கப்பட்டு விட்டது. சேட்டிலைட் உரிமம், ஹிந்தி ரீமேக் என இப்போதைக்கு தளபதி 67, 250 கோடி கிட்ட வசூலை அள்ளிவிட்டது.

Also Read: மாஸ் ஹீரோனா தளபதியை பார்த்து கத்துக்கோங்க.. தில் ராஜு இப்படி புகழ்ந்து பேச காரணம் இதுதான்

தளபதி 67 ஒரு கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டது. இந்த படத்தில் விஜய்க்கு மொத்தம் ஆறு வில்லன்கள். மேலும் த்ரிஷா ஜோடியாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. லோகேஷ் இந்த படத்திற்கான திரைக்கதை தயாரிப்பில் முழுமையாக இறங்கி விட்டார்.

விஜய் வாரிசு படப்பிடிப்பில் இருக்கும் போதே கௌதம் வாசுதேவ் மேனன் விஜய்க்கான ஒரு கதையை அவரிடம் சொல்லிவிட்டதாக கூறியிருக்கிறார். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவும் விஜய்க்காக ஒரு கதையை எழுதி கொண்டிருப்பதாக சொல்லியிருக்கிறார்.

Also Read: கோப்ரா பட தோல்வியை அன்றே கணித்த விஜய்.. பாம்பு ரொம்ப நேரம் படம் எடுத்தா கீறி கிட்ட தோத்து போகும்

Next Story

- Advertisement -