தளபதி-67 பூஜை கூட போடல.. அதுக்குள்ள, ஓடிடி உரிமத்தை பல கோடிக்கு கைப்பற்றிய No.1 நிறுவனம்

பொதுவாக ஒரு படம் இறுதிக்கட்டத்தை நெருங்கும் போதுதான் ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்த படத்தை வாங்க முற்படும். இதுதான் எப்போதுமே நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது முரண்பாடாக விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தின் பூஜையே இன்னும் போடவில்லை.

அதற்குள்ளாகவே நம்பர் ஒன் ஓடிடி நிறுவனம் இப்படத்தை கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய்யின் படம் என்பதால் இந்நிறுவனம் வாங்கி உள்ளதா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. அதுமட்டுமல்லாமல் விஜய், லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இரண்டாவது முறையாக இவர்கள் இணைவதால் படத்தில் வேற லெவல் சம்பவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் தளபதி 67 படத்தில் 6 லிருந்து 7 வில்லன்கள் என சொல்லப்படுகிறது. அதிலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய வில்லனாக நடிக்க உள்ளார். இதனால் இப்படத்தில் லோகேஷ் மாஸ் காட்ட உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

இதனால் மற்ற ஓடிடி நிறுவனங்களுக்கு விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக முந்திக்கொண்டு நெட்ப்ளிக்ஸ் 200 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தளபதி 67 படம் ஓடிடி ரிலீசுக்கு ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது.

விஜய்யின் படங்கள் இதுவரை நேரடியாக ஓடிடியில் வெளியானதில்லை. கோவிட் தொற்று காலத்தில்கூட படத்தை வெளியிடாமல் இருந்த விஜய் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை அனுமதித்த பிறகு மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிட்டார். ஆனால் தற்போது தளபதி 67 படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்