தளபதி 67 இன்னும் ஆரம்பிக்கவே இல்ல.. பல கோடி ரூபாய் லாபம் பார்த்த விஜய்

தளபதி விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். முழுக்க முழுக்க சென்டிமென்ட் படமாக உருவாகி கொண்டிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய், மாஸ்டர் படத்திற்குப் பின் இரண்டாவது முறையாக தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இன்னும் இந்த படத்தின் பூஜை கூட போடல, சூட்டிங்கும் ஆரம்பிக்கவில்லை.

Also Read: கைக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை நழுவ விட்ட எம் ராஜா.. தளபதிக்கு போட்ட பெரிய ஸ்கெட்ச்

அதுக்குள்ள இந்தப் படத்திற்கு லாபம் வந்திருச்சு. அதாவது தளபதி 67 படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் 130 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது. அதைப்போல் சாட்டிலைட் உரிமையையும் 90 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

மேலும் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் 70 கோடிக்கு வாங்கியுள்ளனர். இப்படி படத்திற்கான படப்பிடிப்பு துவங்க படாத நிலையில், சுமார் 300 கோடிக்கு மேல் காசு பார்த்திருக்கிறது தளபதி விஜயின் படம். இதுவரை வேறு எந்த தமிழ் நடிகர்களின் படங்களும் ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பே இப்படி லாபம் பார்த்தது இல்லை.

Also Read: டீச்சராக சக்சஸ் செய்து காட்டிய 5 படங்கள்.. ஜாக் டேனியலுடன் சாட்டையை சுழற்றிய மாஸ்டர் விஜய்

ஏன் ரஜினி, அஜித், கமல், சூர்யா, சிம்பு உள்ளிட்டோரின் படங்களும் கூட படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே இவ்வளவு லாபம் பார்க்கவில்லை. விஜய் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது.

இதனால் இவருடைய அடுத்தடுத்த படங்களுக்கு வியாபார ரீதியாகவும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் வழக்கத்தை விட அதிகமாகவே உள்ளது.

Also Read: கடந்த 20 வருடங்களாக சூப்பர் ஹிட் கொடுத்த நடிகர்களின் தரவரிசை.. முதல் 7 இடத்தை பிடித்த ஹீரோக்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்